மயிலாடுதுறை அருகே பெரம்பூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் இருவேறு இடங்களில் சட்டத்திற்கு புறம்பாக பாண்டி சாராய விற்பனை படுஜோர். வீடியோ வெளியாகிய நிலையில் ஒருவரை கைது செய்து பெரம்பூர் போலீசார் விசாரணை:-
பாண்டிச்சேரி மாநிலம் காரைக்காலில் இருந்து அதிக அளவில் மது பாட்டில்கள், பாண்டி சாராயம் மயிலாடுதுறை மாவட்டத்திற்கு சட்டத்திற்கு புறம்பாக கடத்திவரப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனை தடுக்க போலீசார் நடவடிக்கை மேற்கொண்டாலும் சட்டத்திற்கு புறம்பாக நடைபெறும் சாராயம் மற்றும் மது விற்பனையை கட்டுப்படுத்த முடியவில்லை. சாக்குபைகளில் வைத்தும், இருசக்கர வாகனங்களிலும் சாராய பாட்டில்கள் விற்பனை செய்யப்பட்டு வருவதாக குற்றசாட்டு எழுந்துள்ளது. இந்த நிலையில் பெரம்பூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மங்கைநல்லூரில் ரயில்வே ட்ராக் பகுதியில் சட்டத்திற்கு புறம்பாக பாண்டி சாராய பாட்டில்களை கடத்தி வந்து சாக்கில் வைத்து விற்பனை செய்யும் வீடியோ பதிவு செய்யப்பட்டு வாட்ஸ் அப்பில் பரவி வைரல் ஆகியுள்ளது. இதேபோல் கோடங்குடி பகுதியில் சாராயம் விற்பனை செய்யப்படுவதாக வீடியோ வெளியாகியுள்ளது. இதனைத்தொடர்ந்து பெரம்பூர் போலீசார் மங்கைநல்லூரை சேர்ந்த சாராய வியாபாரி முருகவேல் என்பவரை கைது செய்து மற்றொரு சாராய வியாபாரியை தேடி வருகின்றனர்.













