ஆடி வெள்ளியை முன்னிட்டு மயிலாடுதுறையில் புகழ்பெற்ற ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் ஆலயத்தில், நெய் குள தரிசனம் நடைபெற்றது, சர்க்கரைப் பொங்கலில் பாத்தி கட்டி, அதில் நிரப்பப்பட்ட நெய்யில் தெரிந்த அம்மனின் பிம்பத்திற்கு தீபாரதனை செய்து சிறப்பு வழிபாடு :-
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையில் புகழ்பெற்ற ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் ஆலயம் அமைந்துள்ளது. ஆடி வெள்ளியை முன்னிட்டு இன்று அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது, தொடர்ந்து அம்மனுக்கு வெள்ளி கவச அலங்காரம் சாத்தப்பட்டு, நெய் குளம் எனப்படும் சர்க்கரை பாவாடை தரிசன நிகழ்ச்சி நடைபெற்றது. அம்மனின் முன்பு சர்க்கரை பொங்கல் படையல் இடப்பட்டு அதில் பாத்தி கட்டி, நெய் கொண்டு பாத்தி முழுவதும் நிரப்பப்பட்டது. நெய் குளத்தில் பிரதிபலித்த அம்மனுக்கு தீபாராதனைகள் செய்யப்பட்டது. ஏராளமான பக்தர்கள் மாவிளக்கு படையல் இட்டு வழிபாடு செய்தனர்.













