சூர்யா பிறந்தநாளை முன்னிட்டு செஞ்சியில் பிரம்மாண்ட இரத்ததான முகாம்; 50-க்கும் மேற்பட்டோர் இரத்ததானம்
நடிகர் சூர்யாவின் 51வது பிறந்தநாளை முன்னிட்டு, செஞ்சி–விழுப்புரம் வடக்கு மாவட்ட சூர்யா நற்பணி இயக்கம் சார்பில் செஞ்சி அரசு மருத்துவமனையில் பிரம்மாண்ட இரத்ததான முகாம் நடைபெற்றது.
இந்த முகாமில் 50-க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் பங்கேற்று இரத்ததானம் செய்தனர். தொடர்ந்து அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்கு பால் மற்றும் பிரெட் வழங்கப்பட்டது. மேலும் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு நோட்டுப் புத்தகங்களும் வழங்கப்பட்டன.
சமூக நலனை முன்னிறுத்தி நடைபெற்ற இந்த நிகழ்ச்சி பொதுமக்கள் மற்றும் சூர்யா நற்பணி இயக்க நிர்வாகிகள் பங்கேற்புடன் சிறப்பாக நடைபெற்றது.














