மாணவர் எழுச்சி போராட்டம் மக்கள் எழுச்சியாக மாறினால் பெரும் பாதிப்பு ஏற்படும்” –
இந்த அடக்குமுறைகளை விசிக சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறோம் என விசிக வணிகர் அணி மாநில துணை செயலாளர்
விஜயரங்கன் பேட்டி.
ஆகஸ்ட் 17 உளுந்தூர்பேட்டையில் நடைபெறும் தமிழ் தேசிய எழுச்சி மாநாடு குறித்து
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வணிகர் அணி சார்பாக மண்டல செயற்குழு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது, அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வணிகர் அணி மாநில துணை செயலாளர் விஜயரங்கன் கூறியதாவது:
டெல்லியில் நீட் தேர்வுக்கு எதிராக மாணவர்கள் தன்னிச்சையாக நடத்தி வரும் போராட்டங்கள் மற்றும் போராட்டக்காரர்கள் மீதான அடக்குமுறைகள் குறித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது.
இதில் பேசிய அக்கட்சியின் பிரதிநிதி விஜயரங்கன், மாணவர்களின் கோரிக்கைகளைப் பேசித் தீர்ப்பதை விட்டுவிட்டு அடக்குமுறையைக் கையாள்வதற்குக் கடும் கண்டனம் தெரிவித்தார்.
டெல்லியில் ‘ஜனதா மக்கள் கட்சி’ (ஜெடிபி) உள்ளிட்ட அமைப்புகளின் சார்பில் மாணவர்கள் தன்னிச்சையாகக் களம் இறங்கி நீட் தேர்வுக்கு எதிராகப் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். இந்த கோரிக்கை முற்றிலும் நியாயமானது.
மாணவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி திருப்திகரமான தீர்வை எட்டாமல், இரும்புக் கம்பிகள் மற்றும் லத்திகளைக் கொண்டு தாக்குதல் நடத்துவது ஏற்புடையதல்ல. இதில் ஏராளமான இளைஞர்கள் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் முதலமைச்சர் நீட் விலக்கிற்கான முயற்சிகளை முன்னெடுப்பதாகத் தெரிவித்தாலும், நடைமுறையில் மாணவர் போராட்டங்களை ஒடுக்கும் போக்கு தொடர்கிறது.
தமிழக முதல்வர் நீட் தேர்வை ரத்து செய்கிறேன் என சொல்லிவிட்டு அவரும் அதே செயலையே செய்து வருகிறார் கூட்டணியில் நாங்கள் இருந்தாலும் தவறை சுட்டிக் காட்டாமல் இருக்க மாட்டோம்
இந்த மாணவர் எழுச்சிப் போராட்டம் தமிழ்நாடு வரை பரவியுள்ளது. இது மக்கள் எழுச்சிப் போராட்டமாக மாறினால் இந்தியத் தேசம் மிகப்பெரிய பாதிப்பைச் சந்திக்க நேரிடும். எனவே, தாக்குதல்களையும் கைது நடவடிக்கைகளையும் கைவிட்டு உடனடியாக நிரந்தரத் தீர்வு காண வேண்டும்.
”மாணவர் போராட்டம் மக்கள் போராட்டமாக மாறினால் நாட்டைச் சரிசெய்வது கடினம். எனவே அடக்குமுறைகளை விசிக சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறோம். என் தெரிவித்தார்.














