அறுபத்துமூவர் பேட்டையில்
ஸ்ரீ சப்த மாதா என்கிற பிடாரி அம்மன் கோவிலில் ஆஷாட நவராத்திரியை முன்னிட்டு திருவிளக்கு பூஜை. ஏராளமான பெண்கள் வழிபாடு:-
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அறுபத்துமூவர் பேட்டையில் அமைந்துள்ளது ஸ்ரீ சப்த மாதா என்கிற பிடாரி அம்மன் கோவில். இங்கே ஆஷாட நவராத்திரியை முன்னிட்டு வாராகி அம்மனை வேண்டி திருவிளக்கு பூஜை நடைபெற்றது. வாராகி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டு
உலக அமைதி வேண்டியும், எல்லினோ தாக்கத்திலிருந்து மக்களை காத்திடவும், மழை வேண்டியும் ஆஷாட நவராத்திரி திருவிழா எட்டாம் ஆண்டாக நடைபெற்ற 108 திருவிளக்கு பூஜையில் பெண்கள் குத்துவிளக்குகளை வைத்து மஞ்சள் குங்குமம் உள்ளிட்ட மங்கள பொருட்களால் அர்ச்சனை செய்து லலிதா சகஸ்ரநாமம் வழிபாடு நடத்தினர். இதில் ஏராளமானோர் பங்கேற்றனர்.














