கன்னியாகுமரி மாவட்டம்: தமிழகத்தில் பள்ளி கூடங்களில் காலை உணவு திட்டத்திற்கு காமராஜர் பெயர் சூட்டிய முதல்வர் ஜோசப் விஜய்க்கு பாராட்டுகள் தெரிவித்த காமராஜர் ஆதித்தனார் கழகம்.
திமுக ஆட்சிக் காலத்தில் அப்போதைய முதல்வர் ஸ்டாலினால் கொண்டு வரப்பட்ட முதல்வரின் காலை உணவு திட்டத்தின் பெயரை ‘பெருந்தலைவர் காமராஜர் காலை உணவு திட்டம்’ என தவெக அரசு மாற்றம் செய்துள்ளது.திமுக ஆட்சிக் காலத்தில் அப்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலினால் தொடங்கப்பட்ட ‘முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம்’ தற்போது ‘பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம்’ என பெயர் மாற்றம் செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. தவெக அரசு இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம்’ எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தவெக அரசு இதற்கான அரசாணையை வெளியிட்டுள்ளது. அத்துடன் இத்திட்டம் 6 முதல் 8-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டு, ஒரு மாணவருக்கு ரூ. 12.71 வீதம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் காமராஜர் ஆதித்தனார் கழகம் காலை உணவு திட்டத்திற்கு பெருந்தலைவர் காமராஜர் பெயர் மாற்றப்பட்டதற்கு காமராஜர் ஆதித்தனார் கழகம் தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்துள்ளது.கன்னியாகுமரி மாவட்டத்தை தலைமை இடமாக கொண்ட காமராஜர் ஆதித்தனார் கழகத்தின் நிறுவன தலைவர் சிலம்பு சுரேஷ் கூறியதாவது.
காலை உணவு திட்டத்திற்கு காமராஜர் பெயர் சூட்டப்பட்டதற்கு முதல்வருக்கு பாராட்டுக்களை தெரிவிப்பதாகவும்.வறுமையினால் ஏழை மாணவர்களுக்கு கல்வி பாதிக்கப்பட்டகூடாது என்பதற்காக மதிய உணவு திட்டத்தை கொண்டு வந்தவர் காமராஜர்.அதற்கு பிறகு வந்த திராவிட கட்சிகள் பல்வேறு திட்டங்களை அறிவித்தாலும் காலை உணவு திட்டத்திற்கு காமராஜர் பெயர் சூட்டிய முதல்வர் விஜய்க்கு நன்றி.
மேலும் அத்துடன் இத்திட்டம் 6 முதல் 8-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கும் விரிவு படுத்தப்பட்டுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. கல்வி என்றாலே காமராஜர் தான் அவர் பெயர் வைத்திருப்பதற்கு தமிழக முதல்வர் நன்றி என தெரிவித்தார்.















