மக்களவை எதிர்கட்சி தலைவர் ராகுல் காந்தி கைது செய்யப்பட்டதை கண்டித்தும் நீட் தேர்வை ரத்து செய்ய கோரியும் விழுப்புரத்தில் காங்கிரஸ் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
மக்களவை எதிர்கட்சி தலைவர் ராகுல் காந்தி கைது செய்யப்பட்டதை கண்டித்தும் நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தியும் விழுப்புரத்தில் நகராட்சி திடலில் காங்கிரஸ் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் காங்கிரஸ் கட்சியின் விழுப்புரம் மத்திய மாவட்ட தலைவர் சிவா தலைமையில் நடைபெற்ற இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஒன்றிய பாஜக அரசை கண்டித்தும் நீட் தேர்வை ரத்து செய்ய கோரியும் கண்டன கோஷங்களை எழுப்பினர் இதில் மாநில துணை பொதுச்செயலாளர் குலாம் மொய்தீன் ,மாநில செயலாளர் தயானந்தம்,நகர தலைவர் செல்வராஜ்,மாவட்ட துணை பொதுச்செயலாளர் முபாரக்,மாநில நிரந்தர அழைப்பாளர் பாலசுப்ரமணியன்,மாநில ஒருங்கிணைப்பாளர் ஶ்ரீராம் உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.












