தரங்கம்பாடி அருகே பொறையாறு செயின் ஜார்ஜ் புனித சந்தியாகப்பர் ஆலயத்தில் 26 ம் ஆண்டு தேர்பவனி மற்றும் கொடியேற்று விழா. ஆயிரக்கணக்கான பெண்கள் சீர்வரிசை, தென்னங்கன்றுகள், எடுத்தும் தேர் பவனி உடன் சென்று வழிபட்டனர்.
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா பொறையாறு ராஜம்பாள் தெருவில் உள்ள செயின்ட் ஜார்ஜ் புனித சந்தியாகப்பர் ஆவழிபட்டனர் 26 ஆம் ஆண்டு தேர்பவனி மற்றும் கொடியேற்று விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது. முன்னதாக, அலங்கார குதிரை, ஒட்டகம், சென்டைமேளம் முழங்க ஆலயத்திலிருந்து ஆயிரக்கணக்கான பெண்கள் சீர்வரிசை, தென்னங்கன்றுகள், எடுத்துச் சென்று கொடி ஊர்வலம் புறப்பட்டது. அதனை தொடர்ந்து சந்தனகுடம், குதிரை வண்டியில் கொடி ஊர்வலம் சென்றது. அதனை தொடர்ந்து மிக்கல் ஆண்டவர், தேவமாதா குழந்தை ஏசு செயின்ட் ஜார்ஜ் புனித சந்தியாகப்பர் ஆகிய சுருவங்கள் தனித்தனியாக அலங்கரிக்கப்பட்ட ரதத்தில் வைக்கப்பட்டு பல்வேறு வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு விமர்சையாக ஊர்வலம் புறப்பட்டது . ராஜம்பாள் தெரு, மெய்தீன் மரைக்காயர் தெரு, வேப்பமரத்தெரு, காளியம்மன் கோவில் தெரு, பார்வதி அம்மன் கோவில் தெரு வழியாக ஊர்வலம் சென்று ஆலயத்தை அடைந்தது. பின்பு ஆலயத்தில் உள்ள கொடிமரத்தில் கோடி ஏற்கப்பட்டது. இதில் தமிழ்நாடு புதுச்சேரி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலிருந்து ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்துக்கொண்டனர்.













