ஆதிதிராவிடர் நலத்துறை என்ற பெயரை மாற்றி சமூக நீதி துறை என பெயர் மாற்றப்பட்டதை கண்டித்தும், பழைய படி ஆதிதிராவிடர் நலத்துறை என மாற்ற வேண்டும் என புரட்சி பாரதம் கட்சியினர் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அவர்கள் ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
தமிழக அமைச்சரவையில் ஏற்கனவே ஆதிதிராவிடர் நலத்துறை என்று இருந்த நிலையில் புதிதாக பொறுப்பேற்ற தவெக அரசு ஆதிதிராவிடர் நலத்துறை என்பதை சமூக நீதி துறை என மாற்றம் செய்துள்ளது. இதற்கு அமைச்சராக விசிகவை சேர்ந்த வன்னி அரசு நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் சமூக நீதித்துறையை ஆதிதிராவிடர் நலத்துறை என பெயர் மாற்றம் செய்ய வேண்டும் எனவும் சமூக நீதித்துறை என்ற பெயரை ரத்து செய்ய வேண்டும் எனவும் பல்வேறு அமைப்புகள் மூலம் கோரிக்கை எழுந்துள்ளது. இந்த நிலையில் புரட்சி பாரதம் கட்சியினர் திருவள்ளூர் ஆட்சியர் அலுவலகம் முன்பு சமூக நீதித்துறையை ஆதிதிராவிடர் நலத்துறை என பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என கூறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் புரட்சி பாரதம் கட்சியின் பொதுச்செயலாளர் ருசேந்திரகுமார் தலைமையில் திருவள்ளூர் ஆட்சியர் கவிதாவிடம் நேரடியாக சென்று மனு அளித்தனர். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய புரட்சி பாரத கட்சியின மாநில பொது செயலாளர் ருசேந்திரகுமார், ஏற்கனவே இருந்த ஆதிதிராவிடர் நலத்துறை என்ற பெயரை இருக்க வேண்டும் எனவும் சமூக நீதித்துறை என்பதை ரத்து செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தினார் .













