ரயில்வே மேம்பாலம் வழியாக செல்லும் கேபிள் பைல் ஷாட் விஷுவல் அனுப்பப்பட்டுள்ளது.
மயிலாடுதுறை ரயில்வே துறையில் ஊழல். தனியார் கேபிள்களை லைசன்ஸ் இல்லாமல் ரயில்வே மேம்பாலம் வழியாக கொண்டு செல்லும் நிறுவனத்தினரிடம் ரூ.50,000 வரை லஞ்சம் கேட்கும் ஆடியோ, யுபிஐ பேமெண்ட் ஆதாரங்கள் வெளியாகிய நிலையில், பல லட்சம் ரூபாய் முறைகேடு நடந்துள்ளதாக ஊழியர்கள் குற்றச்சாட்டு:-
ரயில்வே இருப்புப்பாதை தண்டவாளங்களை மேம்பாலங்களின் வழியாகவோ, அன்டர்கிரவுண்ட் வழியாகவோ கடந்து செல்லும் தனியார் பைபர், தொலைதொடர்பு கேபிள் இணைப்புகளுக்கு ரயில்வே துறையில் விண்ணப்பித்து, லைசன்ஸ் தொகையை செலுத்தி, தடையில்லா சான்று அனுமதி பெற்ற பின்னரே கேபிள் இணைப்புகளை கொண்டு செல்ல வேண்டும்; என்பது ரயில்வே விதி. ஆனால், அவ்வாறு பணம் செலுத்தப்படாமல் மயிலாடுதுறையில் ரயில்வே சந்திப்பில் உள்ள சாரங்கபாணி ரயில்வே பாலம் உள்ளிட்ட பல்வேறு பாலங்களின் வழியாக தண்டவாளத்தை கடந்து 15-க்கு மேற்பட்ட தனியார் கேபிள் இணைப்புகள் முறையற்ற வகையில் செல்கிறது.
அவ்வாறு லைசென்ஸ் இல்லாமல் ரயில்வே மேம்பாலம் வழியாக கேபிள்களை கொண்டு செல்லும் நிறுவனத்தினரிடம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் அப்போது பணியில் இருந்த ரயில்வே அதிகாரியான சீனியர் செக்சன் என்ஜினியருக்காக லஞ்சம் கேட்டு ரயில்வே ட்ராலிமேன் கார்த்தி என்பவர் பேசும் ஆடியோ வெளியாகியுள்ளது. அதில், லைசென்ஸ் இல்லாமல் செல்லும் கேபிள் இணைப்புகளுக்கு தலா ரூ.50,000 தர வேண்டும் என தனது உயரதிகாரி எதிர்பார்ப்பதாக கேபிள் நிறுவனம் நடத்தும் ஒருவரிடம் ரயில்வே ட்ராலிமேன் கார்த்தி கேட்கிறார். இதற்காக, அந்த நபர் 2025 டிசம்பர் 24 மற்றும் 26 ஆகிய தேதிகளில் ரூ.8,000, ரூ.20,000 என இரண்டு தவணைகளாக ரூ.28,000 யுபிஐ மூலமாக செலுத்தியுள்ள ஆதாரமும் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து, ரயில்வே ஊழியர்கள் துறை மேலதிகாரிகள், ரயில்வே விஜிலன்ஸ் அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. ரயில்வே துறைக்கு செல்ல வேண்டிய வருவாயை முறைகேடான வகையில் பெற்ற அதிகாரி மீது, ஆடியோ, யுபிஐ பேமெண்ட் ஆதாரத்தின் அடிப்படையில் ரயில்வே துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஊழியர்கள் எதிர்பார்க்கின்றனர்.














