கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாவட்ட சிறையில் உயிரிழந்த சபரி வர்மனின் குடும்பத்தினரை நேரில் ஆறுதல் கூறினார் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து கூறியதாவது:
சபரி வர்மன் வழக்கில் பாஜக சார்பில் சிபிஐ விசாரணை கோருவோம் ,
காவல்துறையை கையில் வைத்திருக்கும் முதல்வரே இப்படி செய்கிறார்.
60 நாட்கள் தான் ஆகிறது 5 ஆண்டுகள் இந்த ஆட்சி நீடித்தால் என்னவெல்லாம் நடக்குமோ
140 கிலோ கஞ்சா வைத்திருந்த தவெக நிர்வாகி மீது வழக்கு கூட போடவில்லை
பத்திரிக்கையாளர் விஜயன் மீது தாக்குதல் நடத்தி உள்ளார்கள் .
அதற்கு பின்புலத்தில் சிலர் இருக்கிறார்கள் , மோசமான ஆட்சி நடந்து வருகிறது ,
மின்சாரதுறையில் பல குளறுபடிகள் உள்ளது , மின் கட்டணத்தை உயர்த்தி உள்ளார்கள் ,
சட்டமன்ற உறுப்பினர் கைது குறித்த கேள்விக்கு – கடந்த திமுக அரசு கூட 3 ஆண்டுகளுக்கு பின்பு தான் இந்த நடைமுறையில் இறங்கியது ,
ஆனால் இவர்கள் வந்த 60 நாளிலேயே ஆரம்பித்துவிட்டனர் , விமர்சனங்களை பொறுத்துக்கொள்ளும் தகுதி முதலமைச்சருக்கு வேண்டும் ,
படத்தில் மட்டுமே ஜனநாயகம் உள்ளது மக்களுக்கு இல்லை ,
பழனி கோவில் நில மோசடி தொடர்பாக அதிகாரிகள் சஸ்பென்ட் செய்துள்ள அரசு இந்த நிலத்தை யார் வாங்கினார்கள் யாருக்கு எல்லாம் தொடர்பு என்பது வெளியே வரவில்லை என்றும் தெரிவித்தார்.













