மயிலாடுதுறை நகரில் மாவட்ட ஆட்சியர் திடீர் ஆய்வு, இருசக்கர வாகனங்களில் சென்றவர்களிடம் ஆவணங்களை சோதனை செய்ததுடன், ஹெல்மெட் அணியவும், வாகனங்களில் கவனமாக பயணம் செய்யவும் அறிவுரை வழங்கினார் :-
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை நகரில், கொத்தத்தெரு பகுதியில் இன்று காவல்துறையினர் வழக்கமான வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக சென்ற மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த், வாகன சோதனை பணிகள் குறித்து மேற்பார்வை செய்தார். தொடர்ந்து ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனங்களில் வந்தவர்களுக்கு ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து அறிவுரை வழங்கினார். மேலும் கல்லூரி மாணவர்கள் அதிவேகமாக சென்றதை சுட்டிக்காட்டிய மாவட்ட ஆட்சியர், வாகனங்களில் கவனத்துடன் நிதானமாக செல்ல வேண்டும் என்று அறிவுரை கூறி அனுப்பி வைத்தார். மாவட்ட ஆட்சியரின் திடீர் ஆய்வு, அந்தப் பகுதியில் பகுதியில் பரப்பரப்பை ஏற்படுத்தியது














