காவிரி மற்றும் அதன் கிளை ஆறான சத்தியவாணன் வாய்க்காலில் பாதாள சாக்கடை கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைத்து தண்ணீர் திறந்து விடும் திட்டத்திற்கு விவசாயிகள் கடும் எதிர்ப்பு, சாக்கடை போல் மாறிய தண்ணீரை அதிகாரிகள் முன்வைத்து, ஒரு நாள் எங்கள் கிராமத்தில் தங்கிப் பாருங்கள் என்று விவசாயிகள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு :-
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை நகரில் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது மயிலாடுதுறையில் சேகரிக்கப்படும் கழிவுநீர்கள் அனைத்தும், பெரிய குழாய்கள் வழியே மயிலாடுதுறை அடுத்த, ஆறுபாதி வில்லநகர் பகுதியில் அமைந்துள்ள சத்தியவாணன் வாய்க்காலில் திறந்து விடப்படுகிறது இதன் காரணமாக சத்தியவாணன் வாய்க்கால் பகுதியில் உள்ள ஆறுபாதி , விளைநகர் , பாலவெளி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் நிலத்தடி நீர் முற்றிலும் பாதிக்கப்பட்டு சாக்கடை நீராக மாறிவிட்டது. இதனிடையே சித்தர்காடு மற்றும் , ஆறுபாதி பகுதியில் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைத்து கழிவு நீர் சுத்திகரன் செய்யப்பட்டு சத்தியவாணன் வாய்க்கால் மற்றும் காவிரி ஆற்றின் வழியே திறந்து விடுவதற்கு 20 கோடி ரூபாய் மதிப்பீட்டில் திட்டம் தீட்டப்பட்டுள்ளது இதற்கான கருத்துக்கணிப்பு கூட்டம் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. நீர்வளத்துறை நகராட்சி, குடி நாய் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் பங்கேற்ற இந்த கூட்டத்தில் விவசாயிகள் பங்கேற்று தங்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்துக் கொண்டனர். அப்பகுதியில் விநியோகிக்கப்படும் குடிநீரை அதிகாரிகளிடம் காண்பித்து ஒரு நாள் எங்கள் கிராமத்தில் வந்து குடியிருந்து பாருங்கள் என்று அதிகாரிகளிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பாசனத்திற்கு தண்ணீர் கிடைக்காத நிலையில் குடிநீர் ஆதாரமாக விளங்கும் ஆற்றில் கழிவு நீரை திறந்து விடும் காரணமாக, எதிர்காலத்தில் குடிநீர் கூட கிடைக்காத நிலைமை ஏற்படும் என்று வேதனை தெரிவித்தனர்.

















