திருவள்ளூர் அருகே கார் நிறுத்துவதற்கு இடம் இல்லாததால் பக்கத்து வீட்டின் காம்பவுண்ட் சுவற்றை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் இடித்து தரைமட்டமாக்கிய நபர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பாதிக்கப்பட்ட பெண் புகார் அளித்த நிலையில் காம்பவுண்ட் சுரை இடித்து தள்ளும் வீடியோ வைரலாகி பரபரப்பையும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் நகராட்சிக்கு உட்பட்ட 3-வது வார்டு காமராஜர் இரண்டாவது தெருவில் வசித்து வரும் விஜயா (வ/60), என்பவர் தனக்கு சொந்தமான பட்டா நிலத்தில் வீடுகட்டி பின் வீட்டை சுற்றிலும் காம்பவுண்ட் சுவர் அமைத்து வசித்து வந்துள்ளார். இந்த நிலையில் பக்கத்து வீட்டில் வசித்து வரும் சுதாகர் என்பவர் புதிய கார் வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கார் நிறுத்துவதற்கு இடம் இல்லாததால் விஜயா என்பவரின் வீட்டின் காம்பவுண்ட் சுவரை இடித்தால் மட்டுமே கார் உள்ளே செல்லும் என்பதால் காம்பவுண்ட் சுவற்றை இடிக்குமாறு விஜயாவிடம் சுதாகர் கேட்டதாக கூறப்படுகிறது. இதற்கு விஜயா மறுத்து விட்டதால் ஆத்திரமடைந்த சுதாகர் விஜயா இல்லாத நேரம் பார்த்து ஆட்களை வரவைத்து சுத்தியல் கொண்டு காம்பவுண்ட் சுவற்றை அடித்து உடைத்துள்ளார். பின்னர் விஜயா வீட்டிற்கு வந்து பார்த்தபோது காம்பவுண்ட் சுவர் இடித்து தரைமட்டமாக்கி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். பின்னர் இது தொடர்பாக சுதாகரிடம் கேட்டபோது தங்களை தகாத வார்த்தைகளால் பேசி கொலை மிரட்டல் விடுத்ததாகவும் இதுகுறித்து திருவள்ளூர் நகர காவல் நிலையத்தில் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறி திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்தனர் மேலும் அத்துமீறி பட்டா நிலத்தில் உள்ள வீட்டின் காம்பவுண்ட் சுவரை அடித்து உடைக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவி வருகிறது இந்நிலையில் தங்களது உயிருக்கும் பாதுகாப்பு இல்லை என கூறி காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பெண் புகார் அளித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது மேலும் இதுகுறித்து திருவள்ளூர் நகர காவல் துறையிடம் கேட்டபோது சுதாகர் மற்றும் இரண்டு பேர் என மொத்தம் மூன்று பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளதாகவும் அதே போல் எதிர் தரப்பினர் அளித்த புகாரின் பேரிலும் மூன்று பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளதாகவும் தலைமறைவாக உள்ள சுதாகர் தேடி வருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். அத்துமீறி வேறொருவரின் வீட்டின் காம்பவுண்ட் சுரை உடைக்கும் வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது













