நாகையில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம்: 5 கிலோ மீட்டர் தூரம் நடைபெற்ற ஓட்டத்தில் 500க்கும் மேற்பட்டோர் ஆர்வமுடன் பங்கேற்பு.
நாகப்பட்டினம் புதிய பேருந்து நிலையம் அருகிலுள்ள அவுரித்திடலில் இன்று போதை ஒழிப்பு விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம் உற்சாகமாக நடைபெற்றது.
இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை மற்றும் மதுவிலக்கு & ஆயத்தீர்வைத் துறை இணைந்து ஏற்பாடு செய்த இந்த நிகழ்ச்சியை, மாவட்ட ஆட்சியர் கே.ஜே. பிரவீன் குமார், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கேழ்கர் சுப்ரமணிய பாலசந்திரா நாகப்பட்டினம் சட்டமன்ற உறுப்பினர் ஜவாஹிருல்லா கீழ்வேளூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் லதா ஆகியோர் இணைந்து கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.
போதைப்பொருள் பயன்பாட்டை தடுக்கும் நோக்கில் நடைபெற்ற இந்த விழிப்புணர்வு மாரத்தான், அவுரித்திடலில் தொடங்கி மாவட்ட விளையாட்டு அரங்கம் வரை நடைபெற்றது.
இந்த ஓட்டத்தில் மாணவர்கள், இளைஞர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட 500க்கும் மேற்பட்டோர் உற்சாகமாக பங்கேற்று, போதை இல்லா சமுதாயம் என்ற கருத்தை வலியுறுத்தினர்.
நிகழ்ச்சியின் முடிவில், பங்கேற்ற அனைவருக்கும் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
முன்னதாக போதைப்பொருள் ஒழிப்பு குறித்த உறுதிமொழி ஏற்கப்பட்டது.













