மயிலாடுதுறை அரசு துவக்க பள்ளியில், காலை உணவு திட்டத்தை ஆய்வு செய்த அமைச்சர் இடம், மாவட்டங்களின் பெயர்களை பாடலாக பாடிக்காட்டிய பள்ளி குழந்தைகள், விஜய் அங்கிளை பார்த்தபோகனும் கூப்பிட்டு போங்க என்று, மழலை மொழியில், அமைச்சரிடம் கோரிக்கை வைத்த சிறுவர் சிறுமியர் :-
மயிலாடுதுறை மாவட்டத்தில் பொறுப்பு அமைச்சரான உணவுத்துறை அமைச்சர் வேங்கடரமணன், இரண்டாவது நாளாக மயிலாடுதுறை மாவட்டத்தில் இன்று வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டு வருகிறார். மயிலாடுதுறை திருஇந்தளூர் நகராட்சி தொடக்கப்பள்ளியில், காலை உணவு திட்டம் குறித்து ஆய்வு மேற்கொண்ட அமைச்சர், பள்ளி குழந்தைகளுடன் உரையாடினார். உங்களுக்கு பிடித்த நண்பர்கள் யார் உங்களுக்கு பிடித்த உணவுகள் என்ன என்று குழந்தைகள் மொழியில், அவர்களுடன் பேசியதும், சகஜமான குழந்தைகள் அமைச்சரை சூழ்ந்து கொண்டு, தங்களது விருப்பம் பற்றி தெரிவித்தனர். தமிழ்நாட்டில் உள்ள 38 மாவட்டங்கள் குறித்து பள்ளிக் குழந்தைகள் ஒருங்கிணைந்து, மாவட்டங்களின் பெயர்களை வரிசையாக பாடி காட்டினர். கைதட்டி அமைச்சர் பாராட்டு தெரிவித்தார். தொடர்ந்து மழலை மொழியில் பேசிய குழந்தைகள், விஜய் அங்கிளை நாங்கள் பார்க்கனும் கூப்பிட்டு போங்க இல்லன்னா கூப்பிட்டு வாங்க என்று கோரிக்கை விடுத்தனர். சிரித்துக் கொண்டே சரி என்று கூறிய அமைச்சர், முதலமைச்சர் இடம் தெரிவிப்பதாக தெரிவித்தார். தொடர்ந்து காலை உணவு திட்டத்தில் குழந்தைகளுடன் அமைச்சர் மற்றும் மாவட்ட ஆட்சியர் சேர்ந்து உணவு அருந்தினர்.














