பிரதமர் பயணத்தில் ஒருநாள் கூட விடுமுறை எடுக்காமல் நாட்டின்பால் தனது வாழ்க்கையை அர்ப்பணித்து கொண்டிருக்கும் பிரதமர் மீது நாட்டு மக்கள் நம்பிக்கை வைத்துள்ளதாகவும் உலகிற்கு வழிகாட்டும் இந்தியாவை பிரதமர் உருவாக்குவதகவும்
பா.ஜ.க., மூத்த தலைவரும் பிரதமர் நரேந்திர மோடிக்கு நெருக்கமானவருமான நாகர்கோவில் முன்னாள் எம்.எல்.ஏ., காந்தி பேட்டி.
சுதந்திர இந்தியாவில் முதல் பிரதமராக நீண்ட நாட்கள் பதவியில் இருந்த நேரு வின் சாதனையை பிரதமர் மோடி முறியடித்துள்ளார். இதற்கு உலக தலைவர்கள் முதல் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் பாரதிய ஜனதா கட்சியில் ஆரம்ப கால உறுப்பினரும் நாகர்கோவில் முன்னாள் எம்.எல்.ஏ.,யுமான காந்தி வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் கூறும் போது,
140 கோடி மக்களின் நம்பிக்கைக்கு உரியவராக பிரதமர் மோடி பணியாற்றி வருகிறார்.
நாடு விடுதலை பெற்றபின் முதல் பிரதமராக இருந்த நேரு அவர்கள் 4398 நாட்களோடு அவரது பதவியை நிறைவு செய்தார். இந்திரா காந்தி அவர்கள் 4077 நாட்கள் பதவியில் இருந்தார்.
தற்போதைய டிஜிட்டல் உலகில் 140 கோடி மக்களின் நம்பிக்கையையும், உலக நாடுகளில் நம்பிக்கைக்கு உரிய தலைவராக வளர்ந்து வந்துள்ளார். இந்தியாவின் பெருமையை உலகிற்கு எடுத்து செல்வதிலும், இந்திய பொருளாதாரத்தை மேம்படுத்தி கொடுப்பதிலும் மிக சிறப்பாக தொடர்ந்து பணியாற்றி கொண்டிருக்கிறார்கள்.
பிரதமர் பயணத்தில் ஒருநாள் கூட விடுமுறை எடுக்காமல் நாட்டின்பால் தனது வாழ்க்கையை அர்ப்பணித்து கொண்டிருக்கும் பிரதமர் மீது நாட்டு மக்கள் அனைவரும் நம்பிக்கை வைத்துள்ளார்கள்.
பிரதமரின் பயணத்தில் இன்னும் தொடர்ந்து நாட்டின் முன்னேற்றதிற்கும் உலகிற்கு வழிகாட்டும் இந்தியாவை உருவாக்கி தருவதற்கு ஆதரவையும் வாழ்த்துக்களையும் வணக்கத்தையும் தெரிவித்து பிரதமரின் பயணம் தொடர வேண்டும் என்று விரும்புகிறோம். என கூறினார்.














