திருத்தணயில் தவெக சார்பில் முதலமைச்சர் ஜோசப் விஜய் பிறந்தநாள் முன்னிட்டு ரத்ததானம் முகாம்.
தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் ரத்த தானம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டு வருகிற நிலையில் இதேபோல் திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி தெற்கு ஒன்றிய செயலாளர் தியாகு ஏற்பாட்டில் திருத்தணியில் உள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் ரத்ததான முகாம் நடைபெற்றது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட தவெக கட்சி நிர்வாக மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டு ரத்ததானம் வழங்கினர். பின்னர் அரசு மருத்துவமனையில் ரத்த வங்கி குழுவினர் ரத்தத்தை சேகரித்து பின்னர் ரத்தம் வழங்கியவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. மேலும் ரத்ததானம் வழங்கியவர்களுக்கு தமிழக வெற்றி கழகம் சார்பில் பிரட் பழம் ஜூஸ் உள்ளிட்ட உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டது.














