குமரி மாவட்டத்தில் விபத்து உயிரிழப்புகளை தடுக்க AI தொழில்நுட்பத்துடன் கூடிய புதிய திட்டத்தினை தொடங்கி வைத்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் R. ஸ்டாலின்
KAAVAL AI – Automatic Traffic Violation Detection System
“ZERO ACCIDENT KUMARI” என்ற இலக்கை முன்னிறுத்தி செயல்பட்டு வரும் கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் ஸ்டாலின் அவர்கள், சாலைப் பாதுகாப்பை மேம்படுத்தும் நோக்கில் பல்வேறு நவீன தொழில்நுட்பத் திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறார்.
அதன் தொடர்ச்சியாக, இன்று (08.06.2026) நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலக ரவுண்டானாவில், செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்துடன் செயல்படும் KAAVAL AI – Automatic Traffic Violation Detection System திட்டத்தை தொடங்கி வைத்தார். இந்தத் திட்டம் குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் கூறும் போது குமரி மாவட்டத்தில் 65 சதவீத விபத்துக்கள் ஹெல்மெட் போடாமல் இருந்து வருவதால்தான் நடந்து வருகிறது என ஆய்வுகள் தெரிவிக்கின்றன மேலும் தற்போது இருசக்கர வாகனங்களில் பயணிப்பவர்கள் பெருமளவு ஹெல்மெட் அணிந்து பயணித்து வருவதாகவும் விபத்து இன்றி பயணம் மேற்கொள்ள அவர்களாகவே ஹெல்மெட் அணிய வேண்டும் என்றும்
தற்போது
முதல் கட்டமாக மாவட்ட ஆட்சியர் அலுவலக சந்திப்பில், சாலைகளின் நான்கு திசைகளிலும் AI தொழில்நுட்பத்துடன் கூடிய அதிநவீன கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. போக்குவரத்து விதிமீறல்களை தானாகவே கண்டறியும் திறன் கொண்டவை.
விதிமீறலில் ஈடுபடும் வாகனங்களின் பதிவு எண்கள் (Vehicle Registration Numbers) சந்திப்பில் அமைக்கப்பட்டுள்ள டிஜிட்டல் மானிட்டரில் உடனுக்குடன் காட்சிப்படுத்தப்படும். மேலும், விதிமீறலின் தன்மைக்கேற்ப அபராத நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என்றும் அடுத்த கட்டமாக பல்வேறு முக்கிய சாலைகளில் இந்த திட்டம் செயல்படுத்தப்படும் என்றும் கூறினார்
இத்திட்டம் சென்னை ராஜலட்சுமி பொறியியல் கல்லூரி மாணவர்கள் மற்றும் கன்னியாகுமரி மாவட்ட காவல்துறை இணைந்து மேற்கொண்டுள்ள புதுமையான கூட்டு முயற்சியின் மூலம் உருவாக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டுள்ளது. சிறப்பாக இந்த AI ப்ரோக்ராமை வடிவமைத்த சென்னை ராஜலட்சுமி பொறியியல் கல்லூரி மாணவர்களை சான்றிதழ் வழங்கி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாராட்டினார்.
இந்த முயற்சி மூலம் போக்குவரத்து விதிமீறல்களை குறைத்து, விபத்துகளையும் உயிரிழப்புகளையும் தடுப்பதுடன், பொதுமக்களிடையே சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வை மேலும் வலுப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிகழ்ச்சியில் நாகர்கோவில் உட்கோட்ட துணைக் காவல் கண்காணிப்பாளர் இளஞ்செழியன், போக்குவரத்து ஆய்வாளர் அருண், உதவி ஆய்வாளர் அசோக் மற்றும் ராஜலட்சுமி பொறியியல் கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டனர்.














