தரங்கம்பாடி கடற்கரையில் மாயையால் மீன் வடிவில் மறைந்திருந்த இரணியாசுரனை திருவிடைக்கழி முருகப்பெருமான் வதம் செய்யும் ஐதீக நிகழ்வு:- ஆயிரக்கணக்கான பக்தர்கள் கண்டு தரிசனம் செய்து வழிபாடு. முன்னதாக திருவிடைக்கழி கோவிலில் வேல் வாங்கும் நிகழ்வும் ஐதீக நிகழ்வுப்படி நடைபெற்றது
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகாவில் அமைந்துள்;ளது பிரசித்தி பெற்ற திருவிடைக்கழி சுப்பிரமணியசுவாமி கோயில் அறுபடை வீடுகளுக்கு இணையான தலமாகமாகவும், சோழநாட்டு திருச்செந்தூர் என்றும் போற்றப்படுகிறது. திருச்செந்தூரில் முருகப்பெருமான் சூரனை வதம் செய்த பின்னர் மாயையால் தப்பி தரங்கம்பாடி கடல் பகுதியில் மறைந்திருந்த சூரனின் இரண்டாவது மகனான இரணியாசூரனை வதம் செய்து ஏற்பட்ட சாப தோஷம் நீங்க திருவிடைக்கழி தலத்தில் முருகப்பெருமான் சிவனை பூஜித்து தனக்கு ஏற்பட்ட சாபதோஷம் நீங்க பெற்ற தலமாக திகழ்ந்து வருகிறது.
அருணகிரிநாதரின் திருப்புகழில் போற்றிப் புகழப்பட்டுள்ள இக்கோவில் கருவருறையில் முருக பெருமானும், சிவபெருமானும் ஒன்று என்ற தத்துவத்தில் அமைக்கப்பட்டுள்ள ஒரே திருத்தலமாகும். இங்கு சிவபெருமானும் முருகப்பெருமானும் ஒரே கருவறையில் எழுந்தருளி உள்ளதால் முருக பெருமான் சிவ சொரூபமாக காட்சி அளிக்கிறார். சிறப்புமிக்க இக்கோயிலில் வைகாசி சதய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஆறாம் திருநாளான இன்று காலை முருகப்பெருமானுக்கு கோயிலில் சிறப்பு பூஜை செய்யப்பட்டு, கோவிலில் வதம் செய்வதற்கான வேல் வாங்கும் நிகழ்வும் ஐதீக நிகழ்வுப்படி நடைபெற்றது பின்னர் மாலை தரங்கம்பாடி கடற்கரைக்கு எழுந்தருள செய்யப்பட்டார். அங்கு தரங்கம்பாடி மாசிலாமணிநாதர் கோயிலில் இருந்து ஞானாம்பிகை அம்மனிடம் வேல் வாங்கும் நிகழ்வு நடைபெற்றது. பின்னர் கடற்கரையில் மீன் வடிவில் இருந்த இரண்யாசுரனை முருகப்பெருமான் வதம் செய்யும் சூரசம்ஹாரம் நடைபெற்றது. நிகழ்ச்சியை இந்து சமய அறநிலையத்துறையினர் மற்றும் தரங்கம்பாடி தலைமை மீனவ கிராம பஞ்சாயத்தார்கள் செய்திருந்தனர். இறுதியில் மீனவ பஞ்சாயத்தார்கள் சார்பில் சீர் வரிசை வழங்கப்பட்டு சிறப்பு அர்ச்சனை செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். சுனாமிக்கு பிறகு நிறுத்தப்பட்ட இந்த ஐதீக திருவிழா 20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் வெகு விமரிசையாக இன்று நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.














