கன்னியாகுமரி மாவட்டத்தில் தற்காலிக துனை வட்டாட்ச்சியர் பணியிடங்களை நிரப்பாமல் 4 மாதமாக அலைக்கழிக்கும் மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து வருவாய் துறை ஊழியர்கள் நாகர்கோவிலில் ஆட்சியர் அலுவகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளதால் அலுவலக பணிகள் முடங்கியது .
குமரி மாவட்ட நிர்வாகத்தினை கண்டித்து இன்று முதல் தொடர் காத்திருப்பு போராட்டம்.
மூன்று மாத காலமாக தகுதியான நபர்கள் இருந்தும் காலியாக உள்ள துணை வட்டாட்சியர் பணியிடங்களை தற்காலிக துணைவட்டாராக நிரப்ப வேண்டுமென்றே காலம் தாழ்த்தி வருவதை தவிர்த்து உடனடியாக பணியிடம்
நிரப்ப வேண்டும்.
2, மாவட்ட நிர்வாகிகளை பழிவாங்கும் நோக்கில் வேண்டுமேன்றே இடம் மாற்றம் செய்ததை உடனே ரத்து செய்ய வேண்டும்.
3, வட்டங்களில் பணி புரியும் வருவாய் வட்டாட்சியர்களை ஓராண்டுகாலம் பணி நிறைவு செய்யாமல் பணியிட மாற்றம் செய்ததை ரத்து செய்ய
வேண்டும்.
மேற்படி கோரிக்கைகள் உடனடியாக நிறைவேறும் வரை அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்கள் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகங்கள் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகங்கள் அனைத்து வருவாய் துறை அலுவலர்களும் பணிகளை புறக்கணித்துவிட்டு மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தினை தொடங்கினார்கள்
கன்னியாகுமரி மாவட்டத்தில் வருவாய் துறையில் 8 தற்காலிக துணை வட்டாச்சியர் பணியிடங்கள் காலியாக உள்ளது இதனால் பிற ஊழியர்களுக்கு வேலை பளு அதிகரித்து உள்ளது கோப்பில் உடனே கையெழுத்து போட்டு தருகிறேன் என்று 4 மாதங்களாக ஊழியர்களை அலைகழித்து வருகின்றனர் அதே வேளையில் தேர்தல் பணியில் இருந்து உயிரிழந்த ஊழியருக்கு இதுவரை கருனை தொகை கூட கொடுக்காமல் இழுத்தடிக்கப்பட்டு வருகிறது இதனை கண்டித்தும் உடனே தற்காலிக துனை வட்டாச்சியர் பணியிடங்களை நிரப்ப கேட்டும் நாகர்கோவிலில் ஆட்சியர் அலுவலகத்தில் வருவாய் துறை ஊழியர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர் – அதிகாரிகள் வந்து பேச்சுவார்த்தை நடத்தியும் உடன்பாடு ஏற்பட வில்லை ஊழியர்களின் போராட்டத்தால் அலுவலக பணிகள் முடங்கியது.












