சீர்காழி அருகே நுங்கு விற்பனையில் ஏற்பட்ட தகராறு நுங்கு வியாபாரி கொலை உறவினர் கைது
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே காரைமேடு மணல்மேடு கிராமத்தை சேர்ந்தவர் மருது பாண்டியன். (23). அதே பகுதியை சேர்ந்தவர் கார்த்திக். (30). இருவரும் உறவினர்கள் . இருவரும் பனை மரத்தில் நுங்கு வெட்டி சூரக்காடு பகுதியில் சாலையோரம் நுங்கு விற்பனை செய்து வந்தனர். இந்நிலையில் நேற்று இரவு மருது பாண்டி வீட்டிற்கு கார்த்தி வந்துள்ளார்.பின்னர் மருதுபாண்டி மற்றும் அவரது மனைவி முத்துலட்சுமி வீட்டிற்குள் உறங்குவதற்கு சென்று விட்டனர்.கார்த்தி வாசலில் படுத்திருந்ததாக கூறப்படுகிறது. இதனிடையே நள்ளிரவுக்கு மேல் கார்த்தி தகர்த்தால் ஆன கதவை திறந்து உள்ளே சென்று அங்கு படுத்திருந்த மருது பாண்டியிடம் மூன்று நாட்களாக பனங்காய் விற்பனை சம்பந்தமாக பணத்தை ஏன் என்னிடம் கொடுக்கவில்லை என்று சொல்லி தான் மறைத்து வைத்திருந்த ஆயுதத்தால் மருது பாண்டியர் முகம் உள்ளிட்ட இடங்களில் கடுமையாக தாக்கியுள்ளார் இதில் பலத்த காயம் அடைந்த மருதுபாண்டி சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளார் இது குறித்து தகவல் அறிந்த சீர்காழி போலீசார் சம்பவ இடத்துக்கு நேரில் சென்று விசாரணை செய்து . மருது பாண்டியன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சீர்காழி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததுடன் வழக்கில் தொடர்புடையதாக மது போதையில் உள்ள கார்த்திகை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர் இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.















