மயிலாடுதுறை, செம்பனார்கோவிலில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 78 ஆம் ஆண்டு பிறந்தநாள் விழாவை முன்னிட்டு உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்து இனிப்புகள், அன்னதானம் வழங்கி அதிமுகவினர் கொண்டாட்டம்:-
தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 78 ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா நாடு முழுவதும் அதிமுகவினரால் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் மயிலாடுதுறை மாவட்டத்தில் அதிமுக மாவட்ட செயலாளர் பவுன்ராஜ் தலைமையில் அதிமுகவினர் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். மயிலாடுதுறை கிட்டப்பா அங்காடி முன்பு அதிமுக நகர கழகம் சார்பில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் திருவுருவப்படத்திற்கு மாவட்ட செயலாளர் பவுன்ராஜ் தலைமையில் அதிமுகவினர் மலர் தூவி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து மயிலாடுதுறை அரசு பெரியார் மருத்துவமனையில் நோயாளிகள் மற்றும் அவர்களின் உறவினர்களுக்கு அன்னதானம் வழங்கி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் ஏராளமான அதிமுக நிர்வாகிகள் பங்கேற்றனர். இதே போல் செம்பனார்கோவில் கடைவீதியில் மாவட்ட செயலாளர் பவுன்ராஜ் தலைமையில் அதிமுக ஒன்றிய நிர்வாகிகள் ஜெயலலிதாவின் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

















