மறைந்த முன்னாள் முதல்வர் புரட்சித் தலைவி அம்மாவின் 78-ஆவது பிறந்தநாளை முன்னிட்டு முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணா ஏற்பாட்டில் திருவள்ளூர் ஸ்ரீ வைத்திய வீரராகவர் கோவில் அருகில் காலை 8 மணி முதல் இரவு 8 வரை தொடர் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி மற்றும் அண்ணா தொழிற்சங்கம் சார்பில் அன்னதானம் மணவாளநகரில் இனிப்பு வழங்கி பிறந்தநாள் விழாவை கொண்டாடினர்.
மறைந்த முன்னாள் முதலமைச்சர் புரட்சித் தலைவி அம்மாவின் 78-வது பிறந்தநாளை முன்னிட்டு தமிழகம் முழுவதும் அதிமுகவினர் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். அதன்படி முன்னாள் அமைச்சரும், திருவள்ளூர் மேற்கு மாவட்ட செயலாளருமான பி வி ரமணா ஏற்பாட்டில் திருவள்ளூர் ஸ்ரீ வைத்திய வீரராகவர் கோவில் அருகில் காலை 8 மணி முதல் இரவு 8 வரை தொடர் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியை அன்னதானம் வழங்கி தொடங்கி வைத்தார். காலையில் இட்லி, பொங்கல் வடை, சட்னி சாம்பாரும் அதனைத் தொடர்ந்து மிளகு சாதம், தக்காளி சாதம், பிரிஞ்சி என தொடர்ந்து வழங்கப்பட உள்ளதாக முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணா தெரிவித்தார். அதே போல் அண்ணா தொழிற்சங்கம் சார்பில் மண்டல செயலாளர் ராமலிங்கம் மற்றும் டிப்போ தலைவர் கமலநாதன், செயலாளர் சண்முகம் ஏற்பாட்டில் பஸ் டிப்போ வளாகத்தில் அன்னதானத்தை முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணா வழங்கினார். அதே போல் மணவாளநகரில் மாநில எம்ஜிஆர் இளைஞர் அணி துணை செயலாளர் எஸ்.ஞானகுமார் ஏற்பாட்டில் புரட்சித் தலைவி அம்மாவின் பிறந்தநாளை பொது மக்கள், வாகன ஓட்டிகள், பேருந்துகளில் பயணம் செய்தவர்களுக்கு இனிப்பு வழங்கி உற்சாகமாக கொண்டாடி மகிழ்ந்தனர். இதில் மாவட்ட துணை செயலாளர் எல்.செந்தில்குமார், மாவட்ட அம்மா பேரவை செயலாளர் கேபிஎம்.எழிலரசன், மாநில பொதுக்குழு உறுப்பினர் எஸ்.ஏ.நேசன், மாவட்ட இளைஞர் அணி தலைவர் புங்கத்தூர் டி.தேவா, கடம்பத்தூர் ஒன்றிய செயலாளர் எஸ்.சுதாகர், முன்னாள் ஊராட்சி மன்றத்தலைவர் சத்தியமூர்த்தி, வழக்கறிஞர் பிரிவு சந்திரசேகர், மாவட்ட அம்மா பேரவை இணை செயலாளர் ஜெயா நகர் குமரேசன், நகர செயலாளர் ஜி.கந்தசாமி, ஒன்றிய அம்மா பேரவை செயலாளர் ஜி.உமாபதி, அம்மா பேரவை நகர செயலாளர் ஜோதி, முன்னாள் கவுன்சிலர் துக்காராம் உட்பட அதிமுக நிர்வாகிகள் கலந்து கொண்டு புரட்சித் தலைவி அம்மாவின் பிறந்த நாளை இனிப்பு வழங்கியும், அன்னதானம் வழங்கியும் கொண்டாடினர்.

















