August 24, 2026, Monday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

மத்தியஅரசாங்கம் திருக்குறளையும்”யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்ற கனியன் பூங்குன்றனாரின் வரிகளைDMKபொதுக்கூட்டத்தில் விமர்சனம்

by Satheesa
February 17, 2026
in News
A A
0
மத்தியஅரசாங்கம் திருக்குறளையும்”யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்ற கனியன் பூங்குன்றனாரின் வரிகளைDMKபொதுக்கூட்டத்தில் விமர்சனம்
0
SHARES
1
VIEWS
Share on FacebookTwitter

மத்திய அரசாங்கம் திருக்குறளையும், “யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்ற கனியன் பூங்குன்றனாரின் வரிகளையும் மேடைகளில் மேற்கோள் காட்டிப் பேசி வருகிறது. ஆனால், தமிழகத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்யும் விஷயத்தில் மட்டும் மத்திய அரசு மௌன விரதம் இருப்பதாக அமைச்சர் மெய்யநாதன் செம்பனார்கோவிலில் நடைபெற்ற திமுக பொதுக்கூட்டத்தில் விமர்சனம்;-

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா செம்பனார்கோவிலில் தமிழ்நாடு தலைகுனியாது என்ற தலைப்பில் பூம்புகார் சட்டமன்ற தொகுதி சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் நிவேதா எம். முருகன் எம்.எல்.ஏ தலைமையில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளர்களாக பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் தலைமைக் கழக செய்தி தொடர்பாளர் பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் ஆகியோர் பங்கேற்று சிறப்புரையாற்றினர். இதில் பேசிய அமைச்சர் மெய்யநாதன் கூறுகையில்:-

பாவேந்தர் பாரதிதாசனின் “பெண்ணடிமை தீருமட்டும் மண்ணடிமை தீருமோ” என்ற வரிகளை மேற்கோள் காட்டி, தந்தை பெரியாரின் பெண்ணுரிமை சித்தாந்தங்களே தமிழகத்தின் வளர்ச்சிக்கு அடித்தளமிட்டது என்று குறிப்பிட்ட அமைச்சர் பெண்களுக்கு சொத்துரிமை, கல்வி உரிமை மற்றும் சம உரிமை கிடைக்கப் போராடிய தந்தை பெரியாரின் சிந்தனைகளுக்கு மறைந்த முதல்வர் கலைஞர் முழு வடிவம் கொடுத்தார். பெண்களுக்கு கல்வி மற்றும் அரசு வேலைவாய்ப்புகளில் முதலில் 30% இடஒதுக்கீடு வழங்கப்பட்டது. தற்போது, 50% க்கும் அதிகமான பெண்கள் உயர் பதவிகளிலும் அரசு வேலைகளிலும் கல்வி நிறுவனங்களிலும் இடம்பெற்றுள்ளனர். உள்ளாட்சித் துறையில் பெண்களுக்கு 33% இடஒதுக்கீடு வழங்கியவர் கலைஞர், தற்போது அதை 60% ஆக உயர்த்தி பெண்களின் அரசியல் பங்கேற்பை ஸ்டாலின் உறுதி செய்துள்ளார். 1989-ல் தருமபுரியில் மகளிர் சுயஉதவிக் குழுக்கள் தொடங்கப்பட்டதன் மூலம் பெண்கள் வங்கி நடவடிக்கைகளில் ஈடுபடத் தொடங்கினர். இன்று வங்கிக் கடன் வழங்குவதற்காக மேலாளர்களே பெண்களின் வீடுகளுக்குச் செல்லும் நிலை உருவாகியுள்ளது. தற்போதைய முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆட்சியில், 1 கோடியே 31 லட்சம் குடும்பத் தலைவிகளுக்கு ‘கலைஞர் மகளிர் உரிமைத் தொகை’ வழங்கப்பட்டு வருகிறது. இது பெண்களின் பொருளாதார தன்னிறைவை மேம்படுத்தியுள்ளது. மேலும், பேருந்துகளில் பெண்களுக்கு விடியல் பயணம் (கட்டணமில்லா பயணம்), 5 பவுனுக்கும் குறைவாக வைக்கப்பட்டிருந்த நகைக் கடன் தள்ளுபடி போன்ற திட்டங்கள் பெண்களின் வாழ்வில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளன. மத்திய அரசுக்குச் செலுத்தப்படும் ஜிஎஸ்டி (GST) வரிப் பகிர்வில் தமிழகம் செலுத்தும் ஒவ்வொரு 1 ரூபாய்க்கும் 29 பைசா மட்டுமே திரும்பக் கிடைக்கிறது. ஆனால், உத்தரப்பிரதேசம் போன்ற மாநிலங்களுக்கு 1 லட்சம் கோடி செலுத்தினால் 2 லட்சத்து 87 ஆயிரம் கோடி திரும்ப வழங்கப்படுகிறது. இந்த நிதிப் பகிர்வில் உள்ள சமச்சீரற்ற தன்மையை எதிர்த்து முதல்வர் ஸ்டாலின் போராடி வருகிறார். கடந்த ஐந்து ஆண்டுகளில், மத்திய அரசாங்கம் திருக்குறளையும், “யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்ற கனியன் பூங்குன்றனாரின் வரிகளையும் மேடைகளில் மேற்கோள் காட்டிப் பேசி வருகிறது. ஆனால், தமிழகத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்யும் விஷயத்தில் மட்டும் மத்திய அரசு மௌன விரதம் இருப்பதாக விமர்சித்த அமைச்சர் தமிழகத்தைப் புறக்கணிக்கும் மத்திய அரசின் போக்கிற்கு இந்தத் தேர்தல் ஒரு தகுந்த பதிலடியாக இருக்கும். 2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தல் வெறும் அரசியல் மாற்றத்திற்கானதல்ல, அது தமிழர்களின் உரிமைகளை மீட்டெடுப்பதற்கான போர் என்றும், தமிழர்களின் சுயமரியாதை மற்றும் சமத்துவத்திற்காக சமூக நீதி மற்றும் உழைப்பின் மதிப்பைப் பாதுகாப்பதற்காக. மாநில உரிமைகள் மற்றும் வரிப்பணத்தின் நியாயமான பங்கிற்காக இளைஞர்களின் வேலைவாய்ப்பு மற்றும் விவசாயிகளின் வாழ்வாதாரத்திற்காக பெண்களின் முன்னேற்றம் மற்றும் குழந்தைகளின் எதிர்காலக் கனவுகளுக்காக. தமிழ் மொழி, பண்பாடு மற்றும் அடையாளத்தை அநீதியிலிருந்து காப்பதற்காக. “200-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி” – இலக்கு “தமிழ்நாடு தலைகுனியாது” என்ற முழக்கத்தோடு நடைபெறும் இந்தக் கூட்டத்தில், திமுக தொண்டர்கள் அனைவரும் அடுத்த 60 முதல் 70 நாட்கள் கண்ணுறங்காமல் களப்பணியாற்ற வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். விவசாயிகள், வியாபாரிகள், பெண்கள் என அனைத்துத் தரப்பு மக்களையும் நேரில் சந்தித்து ஆதரவு திரட்ட வேண்டும் என்றும், 2026 சட்டமன்றத் தேர்தலில் 200-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெற்று, மு.க.ஸ்டாலின் இரண்டாவது முறையாக முதலமைச்சராகப் பொறுப்பேற்கும் அந்த நாள் தமிழகத்தின் பொன்னாளாக அமையும் என்றார். மன்னதாக கூட்டத்தில் பங்கேற்ற அனைவருக்கும் கட்சி துண்டு வழங்கப்பட்டது.

Tags: district newsdmkmk stalintamilnadu
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

விழுப்புரத்தில் புதிதாக கட்டி முடிக்கப்பட்ட47லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிய கட்டிடங்களை Dr.லக்ஷ்மணன் திறந்தார்

Next Post

விழுப்புரம் ரேணுகாம்பாள் கோவிலில் மயானக் கொள்ளை திருவிழா

Related Posts

மயிலாடுதுறையில் ஒரே நேரத்தில் பல கலைகளை 60 நிமிடத்தில் செய்த International World Record Chronicles பதிவு
News

மாதவரம் பால் பண்ணை பகுதியில் கழிவுநீர் கால் வாயால் சாலையில்குளம் போல் கழிவுநீர்

August 23, 2026

பொது வாழ்க்கையில் ஏகாம்பர ரெட்டியார் போன்று அனைவரும் ஈடுபட JCP பிரபாகர்

Bakthi

மயிலாடுதுறையில் உள்ள பிரசித்தி பெற்ற களஞ்சுற்றி விநாயகர் கோயில் கும்பாபிஷேகம்

August 23, 2026
பெண்கள் சமத்துவ தினத்தை முன்னிட்டு தமிழக வெற்றி கழகம் சார்பில் மினி மாரத்தான்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.