திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் மீஞ்சூர் பேரூர் கழக திமுக சார்பில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு மாநில அளவிலான குத்துச்சண்டை போட்டி நடத்தப்பட்டு வெற்றிப்பெற்ற வீரர்களுக்கு கோப்பைகள் வழங்கப்பட்டது.
திமுக இளைஞரணி செயலாரும், துணை முதலமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் மீஞ்சூர் பேரூர் கழக செயலாளர் க.சு.தமிழ் உதயன் தலைமையில் மாநில அளவிலான குத்துச்சண்டை போட்டி நடைபெற்றது.
இந்த போட்டியினை திருவள்ளூர் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் வல்லூர் எம்.எஸ்.கே ரமேஷ்ராஜே குத்துவிளக்கேற்றி போட்டியினை தொடங்கி வைத்தார்.
தமிழ்நாடு முழுவதிலும்இருந்து சிறுவர்கள் முதல் ஆண்கள், பெண்கள் என சுமார் 350ற்கும் மேற்பட்டோர் கலந்துகொண்ட இந்த போட்டியானது 3 நாட்களாக நடத்தப்பட்டது.
இறுதி போட்டியில் கலந்துகொண்டு வெற்றி பெற்ற குத்துச்சண்டை வீரர்களுக்கு கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் டி.ஜே.கோவிந்தராஜ் கோப்பைகளை வழங்கினார்.
அதனை தொடர்ந்து துணை முதலமைச்சர் பிறந்தநாளை போற்றும் விதமாக உலகின் வெளிச்சம் என்ற பாடல் குறுந்தகடு பேரூர் கழக செயலாளர் தமிழ் உதயன் வெளியிட அதனை திமுக செய்தி தொடர்பாளர் ஹபிசுல்லாஹ் பெற்றுக்கொண்டார்.
இந்நிகழ்வில் மீஞ்சூர் பேரூர் கழக விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் திவாரி உட்பட பலர் கலந்துகொண்டனர்.போட்டியில் கலந்துகொண்ட அனைத்து குத்துச்சண்டை வீரர்களுக்கும் சான்றுகளும் வழங்கப்பட்டது.

















