September 26, 2026, Saturday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home Cinema

“நகைச்சுவை உணர்வால் தனக்கென தனி இடத்தை உருவாக்கியவர் ரோபோ சங்கர்” – விஜய் இரங்கல்

by Priscilla
September 19, 2025
in Cinema
A A
0
“நகைச்சுவை உணர்வால் தனக்கென தனி இடத்தை உருவாக்கியவர் ரோபோ சங்கர்” – விஜய் இரங்கல்
0
SHARES
3
VIEWS
Share on FacebookTwitter

சென்னை : பிரபல நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கர் காலமானது திரையுலகையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. 46 வயதான அவர் உடல்நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று இரவு உயிரிழந்தார். அவரது மறைவுக்கு ரசிகர்கள், திரையுலக பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் என பலரும் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளனர்.

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், “தன்னுடைய நகைச்சுவை உணர்வால் சின்னத்திரை முதல் வெள்ளித்திரை வரை தனக்கென தனி இடத்தை உருவாக்கிக் கொண்டவர் ரோபோ சங்கர். அனைவரிடத்திலும் அன்போடு பழகிய பண்பாளர். நண்பரை இழந்த வலியில் உள்ளேன். அவரின் குடும்பத்தாருக்கும் நண்பர்களுக்கும் என் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்” என்று உருக்கம் தெரிவித்தார்.

அதேபோல், நடிகர் கமல்ஹாசன், “ரோபோ என்பது புனைப்பெயர் தான், என் கண்களில் அவர் மனிதன். அவர் என் தம்பி போன்றவர். திடீர் பிரிவு ஏற்றுக்கொள்ள முடியவில்லை” என தன் உணர்வுகளைப் பகிர்ந்தார்.

தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், “தன் நகைச்சுவை திறமையால் பல்லாயிரக்கணக்கான ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை அளித்தவர் சங்கர். அவரது மறைவு திரைத்துறைக்கும், ரசிகர்களுக்கும் பேரிழப்பு” என்றார்.

மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், “சின்னத்திரையிலிருந்து வளர்ந்து, சினிமாவில் தனித்துவமான இடத்தைப் பெற்றவர் ரோபோ சங்கர். அவர் மறைவு மிகுந்த வேதனை தருகிறது” எனத் தெரிவித்தார்.

பாமக தலைவர் அன்புமணி, “ரோபோ சங்கர் நிகழ்ச்சிகளை தொடர்ந்து ரசித்த ஒருவராக அவரின் மறைவு எனக்கு தனிப்பட்ட வேதனையை அளிக்கிறது. சோதனைகளால் நிறைந்த நேரங்களில் அவரது நகைச்சுவை எனக்கு மகிழ்ச்சியை தந்தது. இளம் வயதிலேயே பிரிந்துவிட்டார் என்பது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று” என்றார்.

இதற்கு இணையாக முன்னாள் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

இளம் வயதிலேயே ரசிகர்களின் இதயத்தில் சிரிப்பை விதைத்த ரோபோ சங்கர் மறைவு, திரையுலகுக்கும் ரசிகர்களுக்கும் பெரும் இழப்பாகும்.

Tags: ACTOR ROBO SHANKARACTOR VIJAYchennaipasses awaytamil cinemasTVK VIJAY
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

விஜய் வீட்டில் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை : மர்ம நுழைவால் பரபரப்பு

Next Post

சென்னை, மும்பை உயர்நீதிமன்றங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் பரபரப்பு

Related Posts

திருவாரூரில் ஆட்டோ தொழிற்சங்க தலைவர்கள் மீது போடப்பட்ட பொய் வழக்குகளை வாபஸ் வாங்க CITUசார்பில்  ஆர்ப்பாட்டம்
Cinema

தமிழ் சினிமாவில் நடிகர் விஜயுடன் நடித்தேன் தற்போது அவர் முதலமைச்சராக இருப்பது மகிழ்ச்சி – நடிகை அபர்ணாதாஸ்

July 3, 2026
பீமா ஜுவல்லரி தேனி மதுரை சாலையில் பிரம்மாண்ட ஷோரூம் திறப்பு விழா நடந்தது இந்த நிகழ்ச்சி

March 30, 2026
சினிமா வெறும் பொழுதுபோக்கு அல்ல;சமூகத்திற்கு கருத்து சொல்லவே உழைக்கிறோம் என இயக்குனர் சமுத்திரக்கனி உரை

February 3, 2026
‘ஜனநாயகன்’ திரைப்படத்திற்கு தணிக்கைச் சான்றிதழ் வழங்க உத்தரவு – சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு

January 9, 2026
Next Post
சென்னை, மும்பை உயர்நீதிமன்றங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் பரபரப்பு

சென்னை, மும்பை உயர்நீதிமன்றங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் பரபரப்பு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest
விவாகரத்து பெற்று தரக்கோரி சென்றநிலையில்,வழக்கறிஞர்கள் கொலைமிரட்டல்,பாதிக்கப்பட்ட நபர் குற்றச்சாட்டு

மழைக்காலத்தில் கடந்த ஆட்சியில் மக்கள் அவதி போல் இல்லாமலிருக்க நடவடிக்கை அமைச்சர் விஜய் பாலாஜி பேட்டி

September 14, 2026
மதுரை 66-வது வார்டில் புதிய பேவர் பிளாக் சாலைப் பணி செல்லூர் கே.ராஜூ தொடங்கி வைத்தார்!

January 11, 2026
கோவை சொகுசு ஓட்டலில் ஈவன்ட் மேனேஜர் மீது கொடூரத் தாக்குதல் பாஜக நிர்வாகி உட்பட கும்பல் அதிரடி கைது

December 26, 2025
கலைத் திருவிழா நடத்தி முடித்தும் நிதி வழங்காமல் இழுத்தடிப்பு ஆசிரியர்கள் வேதனை

December 25, 2025
மதுராந்தகம் இடைத்தேர்தல் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வருகையால் போக்குவரத்து நெரிசல்

மயிலாடுதுறை அருகே வீட்டில் சார்ஜ் செய்த போது, பிரபல OLA நிறுவனத்தின் Electric bike தீப்பிடித்த வீடியோ

செங்குன்றம் போலீஸ்கார் வீட்டில் பூட்டை உடைத்து 20 சவரன் தங்க நகை &1Kgவெள்ளி கொள்ளை

கீரிப்பாறை அரசு ரப்பர் கழக தொழிலாளர்களின் சம்பள உயர்வு பேச்சுவார்த்தை தொடர்பாக தொடரும் போராட்டம்

திருவாரூர் ஆட்சியர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்ற பொறியியல் பட்டதாரி சகோதரர்களால் பரபரப்பு

September 24, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.