• Home 1
  • Home 2
  • Home 3
  • Home 4
  • Home 5
  • Home 6
Retrotamil
  • Home
  • News
  • Cinema
  • Bakthi
  • Sports
  • Business
  • Rasipalan
  • Gadget
No Result
View All Result
  • Home
  • News
  • Cinema
  • Bakthi
  • Sports
  • Business
  • Rasipalan
  • Gadget
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home Cinema

நயன்தாரா ஆவணப்படத்தில் சந்திரமுகி பட காட்சிகள்.. தயாரிப்பு நிறுவனத்திற்கு ஐகோர்ட் அதிரடி உத்தரவு !

by Priscilla
September 10, 2025
in Cinema
0
நயன்தாரா ஆவணப்படத்தில் சந்திரமுகி பட காட்சிகள்.. தயாரிப்பு நிறுவனத்திற்கு ஐகோர்ட் அதிரடி உத்தரவு !
0
SHARES
1
VIEWS
Share on FacebookShare on Twitter

நடிகை நயன்தாராவின் ஆவணப்படத்தில் இடம்பெற்றுள்ள சந்திரமுகி பட காட்சிகளை நீக்கக் கோரிய வழக்கில் பதில் மனு தாக்கல் செய்ய ஆவண பட தயாரிப்பு நிறுவனமான டார்க் ஸ்டூடியோ நிறுவனத்துக்கு அக்டோபர் 6 ஆம் தேதி வரை அவகாசம் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நடிகை நயன்தாராவின் ஆவணப்படத்தை டார்க் ஸ்டூடியோ தயாரித்தது. இந்த ஆவணப்படம், 2024 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் நெட் ஃபிலிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியிடப்பட்டது. இந்த ஆவணப்படத்தில், தனது வொண்டர்பார் தயாரிப்பு நிறுவனத்தின் அனுமதி பெறாமல் நானும் ரவுடி தான் பட காட்சிகளை பயன்படுத்தியுள்ளதாகக் கூறி, ஒரு கோடி ரூபாய் இழப்பீடு கேட்டு நடிகர் தனுஷ் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு நிலுவையில் உள்ளது.

இந்நிலையில், நயன்தாரா ஆவணப்படத்தில் அனுமதி பெறாமல், சந்திரமுகி பட காட்சிகளை பயன்படுத்தியுள்ளதாக குற்றம்சாட்டி, படத்தின் பதிப்புரிமை பெற்றுள்ள ஏபி இண்டர்னேஷனல் நிறுவனத்தின் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனுவில், ஆவண படத்தில் சந்திரமுகி பட காட்சிகளை நீக்க கோரியும், 5 கோடி ரூபாய் இழப்பீடு கோரியும் நோட்டீஸ் அனுப்பியும், இன்னும் அவற்றை பயன்படுத்தி வருவதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

ஆவணப் படத்தில் சந்திரமுகி பட காட்சிகளை பயன்படுத்த தடை விதிக்க வேண்டும். ஆவண படத்தில் உள்ள காட்சிகளை நீக்க வேண்டும். ஆவண படத்தின் மூலம் ஈட்டிய லாபக் கணக்கை சமர்ப்பிக்க உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரப்பட்டுள்ளது. இந்த வழக்கு நீதிபதி செந்தில்குமார் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த பிரச்னை தொடர்பாக பேச்சுவார்த்தை நடந்து வருவதாக டார்க் ஸ்டூடியோ நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

ஆனால் மனுதாரர் தரப்பில், பேச்சுவார்த்தை நடந்து வருவதாக இதுவரை எந்த தகவலும் இல்லை எனவும் வழக்கில் இன்னும் பதில் மனு தாக்கல் செய்யப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, வழக்கில் பதில் மனு தாக்கல் செய்ய டார்க் ஸ்டூடியோ நிறுவனத்துக்கு அக்டோபர் 6 ஆம் தேதி வரை அவகாசம் வழங்கிய நீதிபதி, விசாரணையை அன்றைய தினத்துக்கு தள்ளி வைத்தார்.

Tags: actress nayantharachandramukhichennai high court
Previous Post

செங்கோட்டையன் – அமித் ஷா சந்திப்பு : அதிர்ச்சியில் அதிமுகவினர்… அடுத்து என்ன ?

Next Post

அமித் ஷாவைச் சந்தித்த செங்கோட்டையன்… அதிமுக-வை கடுமையாக விமர்சித்த திருமாவளவன் !

Related Posts

திருவாரூரில் ஆட்டோ தொழிற்சங்க தலைவர்கள் மீது போடப்பட்ட பொய் வழக்குகளை வாபஸ் வாங்க CITUசார்பில்  ஆர்ப்பாட்டம்
Cinema

தமிழ் சினிமாவில் நடிகர் விஜயுடன் நடித்தேன் தற்போது அவர் முதலமைச்சராக இருப்பது மகிழ்ச்சி – நடிகை அபர்ணாதாஸ்

July 3, 2026
பீமா ஜுவல்லரி தேனி மதுரை சாலையில் பிரம்மாண்ட ஷோரூம் திறப்பு விழா நடந்தது இந்த நிகழ்ச்சி
Cinema

பீமா ஜுவல்லரி தேனி மதுரை சாலையில் பிரம்மாண்ட ஷோரூம் திறப்பு விழா நடந்தது இந்த நிகழ்ச்சி

March 30, 2026
சினிமா வெறும் பொழுதுபோக்கு அல்ல;சமூகத்திற்கு கருத்து சொல்லவே உழைக்கிறோம் என இயக்குனர் சமுத்திரக்கனி உரை
Cinema

சினிமா வெறும் பொழுதுபோக்கு அல்ல;சமூகத்திற்கு கருத்து சொல்லவே உழைக்கிறோம் என இயக்குனர் சமுத்திரக்கனி உரை

February 3, 2026
‘ஜனநாயகன்’ திரைப்படத்திற்கு தணிக்கைச் சான்றிதழ் வழங்க உத்தரவு – சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு
Cinema

‘ஜனநாயகன்’ திரைப்படத்திற்கு தணிக்கைச் சான்றிதழ் வழங்க உத்தரவு – சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு

January 9, 2026
ஜனநாயகன் | “Delayed but not Defeated” – விஜய்க்காக குரல்கொடுத்த நடிகர் ஜீவா
Cinema

ஜனநாயகன் | “Delayed but not Defeated” – விஜய்க்காக குரல்கொடுத்த நடிகர் ஜீவா

January 9, 2026
ரிலீஸ் ரத்து… ரீபண்டில் சாதனை படைத்த ‘ஜனநாயகன்’ !
Cinema

ரிலீஸ் ரத்து… ரீபண்டில் சாதனை படைத்த ‘ஜனநாயகன்’ !

January 8, 2026
Next Post
அமித் ஷாவைச் சந்தித்த செங்கோட்டையன்… அதிமுக-வை கடுமையாக விமர்சித்த திருமாவளவன் !

அமித் ஷாவைச் சந்தித்த செங்கோட்டையன்… அதிமுக-வை கடுமையாக விமர்சித்த திருமாவளவன் !

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் மின்னொளி ஐவர் கால்பந்து போட்டி
News

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் மின்னொளி ஐவர் கால்பந்து போட்டி

by Satheesa
November 5, 2026
குடியாத்தம் ரயில் நிலையத்தில் அனாதையாக இருந்த சுமார் 6.5 கிலோ கஞ்சா மூட்டை பறிமுதல்
News

நாகையில் ரூ.100-க்கு சிறப்பு காய்கறித் தொகுப்பு: அலைமோதும் மக்கள் கூட்டம் விற்பனை படுஜோர்

by Satheesa
November 5, 2026
குடியாத்தம் ரயில் நிலையத்தில் அனாதையாக இருந்த சுமார் 6.5 கிலோ கஞ்சா மூட்டை பறிமுதல்
News

திருமுல்லைவாயில் அய்யா வைகுண்டர் ஆலயம் அரசு நிலத்தில் இருப்பதால் ஆவடி மாநகராட்சி சார்பாக நோட்டீஸ்

by Satheesa
November 5, 2026
குடியாத்தம் ரயில் நிலையத்தில் அனாதையாக இருந்த சுமார் 6.5 கிலோ கஞ்சா மூட்டை பறிமுதல்
News

தீபாவளி திருநாளை முன்னிட்டு ஆவடி அருகே தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள்

by Satheesa
November 5, 2026
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home 1
  • Home 2
  • Home 3
  • Home 4
  • Home 5
  • Home 6