சித்ரா பௌர்ணமி முன்னிட்டு மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் 108 திருவிளக்கு பூஜை சிறப்பாக நடைபெற்றது
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு அதிகாலை முதலே நடை திறக்கப்பட்டது.
மூலவர் மற்றும் உற்சவர் அங்காளம்மனுக்கு பால், தயிர், பன்னீர் உள்ளிட்ட வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டு, பல வண்ண மலர்கள் மற்றும் பட்டாடைகளால் சிறப்பாக அலங்காரம் செய்யப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, நீண்ட வரிசையில் காத்திருந்த பக்தர்கள் அங்காளம்மனை தரிசனம் செய்தனர்.
மாலை 6 மணிக்கு மேல், உற்சவர் அங்காளம்மன் சிறப்பு அலங்காரத்தில் விளக்கு பூஜை மண்டபத்திற்கு அழைத்து வரப்பட்டு, 108 திருவிளக்கு பூஜை சிறப்பாக நடைபெற்றது.
இதில் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு குத்துவிளக்குகள் ஏற்றி வைத்து பக்தியுடன் வழிபாடு செய்தனர்.
இந்த நிகழ்வில் கோவில் பூசாரிகள் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.















