சீர்காழி அருகே கார்த்திகை மாத சோமவாரத்தை முன்னிட்டு 1008 சங்க அபிஷேகம் திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே வைத்தீஸ்வரன் கோவிலில் தருமபுரம் ஆதீனத்திற்கு உட்பட்ட தையல்நாயகி அம்மன் உடனாகிய வைத்தியநாதர் சுவாமி கோயில் உள்ளது. இக்கோயிலில் தனி சந்திதியில் செல்வமுத்துக்குமார சுவாமி அருள் பாலிக்கிறார். கார்த்திகை மாதம்சோமவாரத்தை முன்னிட்டு 1008 சங்காபிஷேக சிறப்பு பூஜை நடைபெற்றது. முன்னதாக புனித நீர் நிரப்பப்பட்ட 1008 சங்குகளை நெல்லின் மீது வைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் வழிபாடு மற்றும் தீபாரதனை காண்பிக்கப்பட்டது.தொடர்ந்து புனித நீர் நிரப்பப்பட்ட சங்குகளில் கொண்டு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் மகா தீபாரதனை காண்பிக்கப்பட்டது. இதில் கோயில் கட்டளை திருநாவுக்கரசு தம்பிரான் சுவாமிகள்,மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டுவழிபாடு மேற்கொண்டனர்.















