திருவள்ளூர் அடுத்த கொட்டையூர் கிராமத்தில் உள்ள அரசினர் நடுநிலைப் பள்ளியில் காலை சிற்றுண்டியில் பல்லி விழுந்த உணவை சாப்பிட்ட 40 மாணவர்களுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டதால் திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் 1 முதல் 5-ஆம் வகுப்பு வரை கடந்த திமுக ஆட்சியில் கொண்டு வந்த காலை உணவுத் திட்டத்தை புதிதாக பொறுப்பேற்ற தவெக அரசும் அதனை தொடர்ந்து செயல்படுத்தியது. இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு 6 முதல் 8-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு காலை உணவு திட்டம் விரிவுப்படுத்தப்படும் என அறிவித்து தமிழகம் முழுவதும் இந்த திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது. இந்த நிலையில் திருவள்ளூர் அடுத்த கடம்பத்தூர் ஒன்றியம் கொட்டையூர் கிராமத்தில் அரசினர் நடுநிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் கொட்டையூர் மற்றும் சுற்று வட்டார கிராமங்களைச் சேர்ந்த மாணவ மாணவிகள் 54 பேர் பயின்று வருகின்றனர்.காலை 8.30 மணிக்கு மேல் கோதுமை ரவா கிச்சடியும், சாம்பாரும் காலை சிற்றுண்டியாக வழங்கப்பட்டது. அப்போது சாப்பிடும் போது ரவா கிச்சடியில் பல்லி இருப்பதைக் கண்டு மாணவ மாணவிகள் அதிர்ச்சி அடைந்தனர். இதனால் காலை உணவை சாப்பிட்ட 40 மாணவர்களுக்கு பயத்தில் வாந்தி மயக்கம் ஏற்பட்டது.
மருத்துவமனையில் அனுமதிக்கபட்டு சிகிச்சை பெற்று வரும் மாணவர்களை சந்தித்து நலம் விசாரித்தும், மாணர்களுடைய பெற்றோருக்கு ஆறுதல் தெரிவித்த மக்களுக்காக ஒருவன் இயக்கத்தின் நிறுவனத்தலைவரும் சமூக சேவகருமான சங்கத்தமிழன் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசுகையில்
பள்ளி மாணவர்களுக்கு ஏற்பட்ட இந்த நிகழ்வு மிகவும் வருத்தமாக உள்ளது.
மாணவர்களுக்கு வழங்கப்படும் சிகிச்சை தரமான சிகிச்சை வழங்கப்படுகிறதா என மாவட்ட நிர்வாகம் உறுதி செய்யவேண்டும்
மாணவர்களுக்கு ஏற்பட்ட நிகழ்வை குறித்து தீவிர விசாரணை மேற்கொள்ளவேண்டும்.
அலட்சியமாக செயல்பட்டவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும்,
வருங்கால தலமுறையாக இருக்கும் மாணவர்களுக்கு ஏற்படும் நிகழ்வுகளுக்கு அரசு என்ன நடவடிக்கை எடுக்க போகிறது என கேள்வி எழுந்துள்ளது.
மாவட்ட பொறுப்பு அமைச்சர் பாதிக்கப்பட்ட மாணவர்களை சந்திக்கவில்லை என செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு
மாணவர்கள் மீது அக்கறை இருந்திருந்தால் பள்ளிகல்வித்துறை அமைச்சரும், திருவள்ளூர் மாவட்ட பொறுப்பு அமைச்சரும் சம்பவ இடத்திற்கு வந்து மாணவர்களை சந்தித்திருக்க வேண்டும் அவர்கள் வராமல் உள்ளது வருத்தமாக உள்ளது.
எந்த ஒரு பொறுப்பில் இல்லாமல் நாங்கள் மாணவர்களுக்கு பாதிப்பு என தெரிந்த உடன் மருத்துவ நேரில் வந்திருப்பதாக தெரிவித்தார்.















