இனி நீங்கள் ரசிகர்கள் இல்லை “𝗩𝗜𝗥𝗧𝗨𝗔𝗟 𝗪𝗔𝗥𝗥𝗜𝗢𝗥𝗦”!

தவெக தலைவர் விஜய், கட்சி நிர்வாகிகள் கண்ணியமாக செயல்பட வேண்டும் என்று காணொளி வாயிலாக கட்சி நிர்வாகிகளுக்கு அழைப்பு விடுத்திருக்கிறார்.

தமிழக வெற்றிக்கழகத்தின் தகவல் தொழில் நுட்ப பிரிவு நிர்வாகிகள் கூட்டத்தில் தவெக தலைவர் விஜய் காணொளி வாயிலாக உரையாற்றினார்.

அப்போது பேசிய அவர், “ இந்தியாவிலேயே மிகப்பெரிய சோசியல் மீடியா படை தவெக ஐடி விங் தான். நீங்கள் இனி ரசிகர்கள் இல்லை. மெய் நிகர் போர் வீரர்கள் ​​(𝗩𝗜𝗥𝗧𝗨𝗔𝗟 𝗪𝗔𝗥𝗥𝗜𝗢𝗥𝗦) என அழைக்கத் தோன்றுகிறது. விரைவில் உங்கள் அனைவரையும் சந்திக்கிறேன். கட்சி நிர்வாகிகள் கண்ணியமாக செயல்பட வேண்டும்.” என்று தெரிவித்துள்ளார்.

Exit mobile version