• Home 1
  • Home 2
  • Home 3
  • Home 4
  • Home 5
  • Home 6
Retrotamil
  • Home
  • News
  • Cinema
  • Bakthi
  • Sports
  • Business
  • Rasipalan
  • Gadget
No Result
View All Result
  • Home
  • News
  • Cinema
  • Bakthi
  • Sports
  • Business
  • Rasipalan
  • Gadget
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

தேசிய அளவில் நடைபெற்ற சுற்றுச்சூழல் போட்டியில் வெற்றி பெற்று, இங்கிலாந்து இளவரசர் கையால் பரிசு

by Satheesa
November 20, 2026
in News, News
0
தேசிய அளவில் நடைபெற்ற சுற்றுச்சூழல் போட்டியில் வெற்றி பெற்று, இங்கிலாந்து இளவரசர் கையால் பரிசு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

DESIGN FOR CHANGE என்ற தேசிய அளவிலான நிறுவனமும், பிரிட்டிஷ் இளவரசர் வில்லியம் அவர்களால் தொடங்கப்பட்ட EARTH SHORT என்ற சர்வதேச நிறுவனம் இணைந்து DFC CHILDREN EARTH SHOT 2026 என்ற மாபெரும் சுற்றுசூழல் போட்டியை நடத்தியது.

இங்கிலாந்து இளவரசர் வில்லியம் அவர்களால் கடந்த 2020 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட ராயல் பவுண்டேஷன் மூலம் உருவாக்கப்பட்ட EARTH SHOT பரிசு, சுற்றுச்சூழல் நடவடிக்கைகளில் முன்னோடி தலைமைத்துவத்தை கண்டறிந்தும் அதனை ஆதரித்து கொண்டாடுவதற்காக வடிவமைக்கப்பட்ட உலகின் மிகவும் மதிப்புமிக்க சுற்றுச்சூழல் விருது என்ற பெயரை பெற்றது.

கடந்த நவம்பர் 17ஆம் தேதி குழந்தைகளுக்காக முதன்முறையாக நடைபெற்ற EARTH SHOT விருது வழங்கும் விழாவில் கலந்து கொள்வதற்காக இளவரசர் வில்லியம் மற்றும்  இளவரசி கேத்தரின் ஆகியோர் மும்பை வந்திருந்தனர்.

I CAN EARTH SHOT CHALLANGE நிகழ்ச்சியில் இந்தியாவில் 24 மாநிலங்களில் உள்ள 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பள்ளிகளில் படிக்கும் 10 லட்சம் மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். இந்த முன்னெடுப்பு 9 முதல் 17 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சுற்றுச்சூழல் பிரச்சனைகளை மதிப்பிட்டு அதற்காக அர்த்தமுள்ள நடவடிக்கைகளை எடுக்கும் நோக்கத்துடன், சுற்றுச்சூழல் பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கும், பூமியை மீட்டெடுப்பதற்குமான தீர்வுகளை முன்னெடுப்பதில் குழந்தைகளின் பங்களிப்பை ஊக்குவிக்கும் நோக்கத்துடன் இந்த  போட்டி நடைபெற்றது.

காலநிலையை சரி செய்வோம், கடல்களை மீட்டெடுப்போம், கழிவற்ற உலகை உருவாக்குவோம், இயற்கையை பாதுகாப்போம், காற்று மாசை கட்டுப்படுத்துவோம் உள்ளிட்ட ஐந்து தலைப்புகளின் கீழ் நாடு முழுவதிலும் இருந்து 974 செயல் திட்டங்கள் சமர்ப்பிக்கப்பட்ட நிலையில் 15 செயல் திட்டங்கள் மட்டுமே இறுதி நிலைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டது. இந்தப் 15  செயல் திட்டங்களில் தமிழ்நாட்டில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட இரண்டு செயல் திட்டங்களும் அடங்கும்.

இதில் திருவாரூர் மாவட்டம் அம்மையப்பன் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மட்டும் தான் தமிழ்நாட்டில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரே ஒரு அரசு பள்ளி என்பது பெருமைக்குரிய விஷயம்.

இந்த ஐந்து விதமான தலைப்புகளின் கீழ் 5 வெற்றியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதில் DECOM POSSIBLE என்ற தலைப்பில் கழிவற்ற உலகை உருவாக்குவோம் என்ற கருப்பொருளைக் கொண்டு வெற்றி பெற்றது திருவாரூர் மாவட்டம் அம்மையப்பன் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மாணவர்கள்.

இவர்கள் பழைய செய்தித்தாள்கள் சனல் மற்றும் பயன்படுத்தப்பட்ட வண்ணக் கட்டிகளில் இருந்து தயாரிக்கப்பட்ட ஈரத்தை எதிர்க்கும் தன்மை கொண்ட ஒரு மாற்று கழிவு பையை உருவாக்கினர். இதன் மூலம் அப்பகுதியில் உள்ள தினமும் சேகரமாகும் கழிவுகளை சேகரித்து மறுசுழற்சிக்கு அனுப்பினர். இந்த முயற்சியால் 502 பேர் பயணித்ததாகவும், செயல்படாமல் இருந்த  உரம் தயாரிக்கும் மையம் குழந்தைகளின் இந்த முயற்சி காரணமாக புத்துயிர் பெற்று செயல்பாட்டுக்கு வந்தது. இதனை செயல் திட்டமாக சமர்ப்பித்த அம்மையப்பன் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மாணவர்கள் வெற்றி பெற்று இங்கிலாந்து இளவரசர் கையால் பரிசுகளை பெற்று பாராட்டு மழையில் நனைந்தனர்.

இதனைத் தொடர்ந்து இன்று பள்ளிக்கு வருகை தந்த சாதனை மாணவர்களை அப்பள்ளியில் படிக்கும் மாணவ மாணவிகள் அவரது பெற்றோர்கள், அப்பள்ளி ஆசிரியர்கள் கைகுலுக்கி வாழ்த்து தெரிவித்து பாராட்டியதுடன் சால்வை அணிவித்து உற்சாகமாகக் கொண்டாடி மகிழ்ந்தனர்.

இதனைத் தொடர்ந்து திருவாரூர் மாவட்ட ஆட்சித் தலைவர் மோகனச்சந்திரன் மற்றும் திருவாரூர் சட்டமன்ற உறுப்பினரும் திமுக மாவட்ட செயலாளர் பூண்டி கலைவாணன் ஆகியோர் நேரில் பள்ளிக்குச் சென்று சாதனை மாணவ மாணவிகளை பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர். மேலும் சாதனை மாணவ மாணவிகளுக்கு பல்வேறு பரிசு பொருட்களை வழங்கினார்.

தொடர்ந்து மாணவர்கள் மத்தியில் பேசிய திருவாரூர் மாவட்ட ஆட்சித் தலைவர் கூறும் போது…

பல்வேறு தனியார் பள்ளிகள், மெட்ரிகுலேஷன் பள்ளிகள் என ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பல்வேறு செயல் திட்டங்களை செய்து போட்டு விட்ட நிலையிலும் நமது அரசு பள்ளி மாணவர்கள் முதலில் பிடித்து நம் பக்கம் நமது ஊருக்கும் பெருமை சேர்த்துள்ளனர்.

ஒட்டுமொத்த இந்தியாவுக்கு அரசு பள்ளி மாணவர்கள் சிறப்பாக செயல்படுகிறார்கள் என்று எடுத்துக்காட்டாக நம்ம ஊர் அரசு பள்ளி மாணவர்கள் செய்து காட்டியுள்ளனர்.

70 ஆண்டுகால இந்திய வரலாற்றில் இந்தியாவை செதுக்கிய உயர் அதிகாரிகள், அறிஞர்கள், அறிவியல் ஆய்வாளர்கள் மற்றும் அரசியல்வாதிகள் என அனைவரும் அரசு பள்ளியில் படித்து தான் மிகப்பெரிய உயரத்தை எட்டி உள்ளனர்.

நமது அரசு பள்ளி மாணவர்களின் இந்த அளப்பரிய சாதனைக்கு காரணமான ஆசிரியர்கள் மற்றும் பள்ளி தலைமைஆசிரியர் சதீஷ்குமார் உள்ளிட்டோருக்கு எனது நெஞ்சார்ந்த பாராட்டுக்கள் நன்றிகள் என்றார்.

தேசிய அளவில் நடைபெற்ற போட்டியில் இங்கிலாந்து இளவரசர் கையால் பரிசு பெற்ற திருவாரூர் அரசு பள்ளி மாணவ மாணவிகளின் செயல் திருவாரூர் மக்களை பெருமை அடைய செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

பேட்டி :

  1. பபிதா – சாதனை மாணவர்களின் பெற்றோர்கள்
    2.செல்வராணி -சாதனை மாணவர்களின் பெற்றோர்கள்
  2. சதீஷ்குமார் – பள்ளி தலைமை ஆசிரியர்
    4.ரோஷன் கண்ணா – சாதனை மாணவர்கள் ஒருவர்

Tags: district newstamil nadutamilnadu
Previous Post

விழுப்புரத்தில் புகைப்படக் கலைஞர்களுக்கான நிக்கான் பயிற்சிப் பட்டறை

Next Post

மயிலாடுதுறை அருகே பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்சனையில் ஆடுகளைப்பிடித்துச் சென்றதாகப்புகார் மனு

Related Posts

தேசிய அளவில் நடைபெற்ற சுற்றுச்சூழல் போட்டியில் வெற்றி பெற்று, இங்கிலாந்து இளவரசர் கையால் பரிசு
News

திண்டுக்கல் அருகே 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த கதிர் நரசிங்க பெருமாள் கோயில் குடமுழுக்கு பெருவிழா

November 20, 2026
தேசிய அளவில் நடைபெற்ற சுற்றுச்சூழல் போட்டியில் வெற்றி பெற்று, இங்கிலாந்து இளவரசர் கையால் பரிசு
News

மார்த்தாண்டம் ஐவிஷன் மல்டி மார்ட் எம் எல் எம் என்ற பெயரில் தனியார் நிறுவனம் 1 1/2 கோடி மோசடி

November 20, 2026
தேசிய அளவில் நடைபெற்ற சுற்றுச்சூழல் போட்டியில் வெற்றி பெற்று, இங்கிலாந்து இளவரசர் கையால் பரிசு
News

மயிலாடுதுறையில் கொளத்தூர் எம்.எல்.ஏ வி.எஸ்.பாபு மறைவிற்கு தவெகவினர் மௌன ஊர்வலம்

November 20, 2026
தேசிய அளவில் நடைபெற்ற சுற்றுச்சூழல் போட்டியில் வெற்றி பெற்று, இங்கிலாந்து இளவரசர் கையால் பரிசு
News

வேலூர் செல்லியம்மன் ஆலயத்தில் திருப்பரங்குன்றம் மலை தீபம் ஏற்ற கோரியும் அரசு நல்ல புத்தி வர இந்து முன்னணி சார்பில் ஆர்பாட்டம்

November 20, 2026
தேசிய அளவில் நடைபெற்ற சுற்றுச்சூழல் போட்டியில் வெற்றி பெற்று, இங்கிலாந்து இளவரசர் கையால் பரிசு
News

திருமண மறுவீட்டிற்கு சென்றுவிட்டு ஊருக்கு திரும்பிய போது 100 அடி பள்ளத்தில் வேன் விபத்தில் 3 பேர் பலி

November 20, 2026
தேசிய அளவில் நடைபெற்ற சுற்றுச்சூழல் போட்டியில் வெற்றி பெற்று, இங்கிலாந்து இளவரசர் கையால் பரிசு
News

உலக புகழ் பெற்ற நாகூர் ஆண்டவருக்கு சந்தனம் பூசும் வைபவம் இன்று காலை அதி விமர்சையாக நடைபெற்றது

November 20, 2026
Next Post
தேசிய அளவில் நடைபெற்ற சுற்றுச்சூழல் போட்டியில் வெற்றி பெற்று, இங்கிலாந்து இளவரசர் கையால் பரிசு

மயிலாடுதுறை அருகே பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்சனையில் ஆடுகளைப்பிடித்துச் சென்றதாகப்புகார் மனு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


தேசிய அளவில் நடைபெற்ற சுற்றுச்சூழல் போட்டியில் வெற்றி பெற்று, இங்கிலாந்து இளவரசர் கையால் பரிசு
News

திண்டுக்கல் அருகே 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த கதிர் நரசிங்க பெருமாள் கோயில் குடமுழுக்கு பெருவிழா

by Satheesa
November 20, 2026
தேசிய அளவில் நடைபெற்ற சுற்றுச்சூழல் போட்டியில் வெற்றி பெற்று, இங்கிலாந்து இளவரசர் கையால் பரிசு
News

மார்த்தாண்டம் ஐவிஷன் மல்டி மார்ட் எம் எல் எம் என்ற பெயரில் தனியார் நிறுவனம் 1 1/2 கோடி மோசடி

by Satheesa
November 20, 2026
தேசிய அளவில் நடைபெற்ற சுற்றுச்சூழல் போட்டியில் வெற்றி பெற்று, இங்கிலாந்து இளவரசர் கையால் பரிசு
News

மயிலாடுதுறையில் கொளத்தூர் எம்.எல்.ஏ வி.எஸ்.பாபு மறைவிற்கு தவெகவினர் மௌன ஊர்வலம்

by Satheesa
November 20, 2026
தேசிய அளவில் நடைபெற்ற சுற்றுச்சூழல் போட்டியில் வெற்றி பெற்று, இங்கிலாந்து இளவரசர் கையால் பரிசு
News

வேலூர் செல்லியம்மன் ஆலயத்தில் திருப்பரங்குன்றம் மலை தீபம் ஏற்ற கோரியும் அரசு நல்ல புத்தி வர இந்து முன்னணி சார்பில் ஆர்பாட்டம்

by Satheesa
November 20, 2026
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home 1
  • Home 2
  • Home 3
  • Home 4
  • Home 5
  • Home 6