தஞ்சாவூரில் ஜன.26-ல் நடைபெறவுள்ள திமுக டெல்டா மண்டல மகளிர் அணி மாநாட்டில் மயிலாடுதுறையில் இருந்து மகளிர் பெருந்திரளாக பங்கேற்பது குறித்து திமுக மாவட்ட மகளிரணி மற்றும் மகளிர் தொண்டரணி நிர்வாகிகள் சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது:-
தஞ்சாவூரில் ஜன.26-ஆம் தேதி ‘வெல்லும் தமிழ் பெண்கள்’ என்ற தலைப்பில் டெல்டா மண்டல மகளிர் அணி மாநாடு நடைபெற உள்ளது. இதனிடையே ஏராளமான பெண்கள் பெருந்திரளாக பங்கேற்பது குறித்து மயிலாடுதுறையில் திமுக மாவட்ட மகளிரணி மற்றும் மகளிர் தொண்டரணி நிர்வாகிகள் சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. திமுக மாவட்ட செயலாளர் நிவேதா எம்.முருகன் எம்எல்ஏ தலைமை தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். தொடர்ந்து எம்எல்ஏ நிவேதா முருகன் தமிழ்நாடு முதலமைச்சரின் மகளிர் மேம்பாட்டு திட்டங்களை விளக்கிப் பேசி மாநாட்டில் மாவட்டத்தில் உள்ள அனைத்து மகளிரணி நிர்வாகிகளும் கலந்து கொள்ள வேண்டும் என அறிவுரைகளை வழங்கினார் . இதில், திமுக மாநில பிரசார குழு செயலாளர்கள் ராணி ரவிச்சந்திரன், தேன்மொழி, உட்பட 500-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

















