மயிலாடுதுறை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் பரவலாக பெய்த மழை காரணமாக வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் ஏற்பட்டது, 22 நாட்களுக்கு பிறகு பெய்த மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி :-
மயிலாடுதுறை மாவட்டத்தில் கோடை காலம் முடிந்தும், கடும் வெப்பம் ஏற்பட்டு வந்தது. இதன் காரணமாக பகல் நேரங்களில் பொதுமக்கள் பெருத்த அவதிக்கும் உள்ளாகினர். கடந்த மாதம் 18ஆம் தேதி கடைசியாக ஒரு மணி நேரம் மழை பெய்தது இந்நிலையில் 22 நாட்களுக்குப் பிறகு மயிலாடுதுறை மாவட்டத்தில் இன்று மயிலாடுதுறை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக ஒரு மணி நேரத்திற்கு மேலாக நல்ல மழை பெய்துள்ளது. இதன் காரணமாக வெப்பம் குறைந்து குளிர்ச்சியான சூழல் நிலவியது. வெப்பத்தின் தாக்கம் குறைந்ததால் பொதுமக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.













