திருவாரூர் மாவட்டம் முழுவதும் பலத்த காற்றுடன் சேர்ந்த இடியுடன் கூடிய கனமழை – வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவுவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி..
திருவாரூர் மாவட்டத்தில் கடந்த ஒரு வார காலமாக கோடை காலம் போல வெயில் சுட்டெரித்து வந்தது. அதிலும் இன்று மிக அதிக வெயில் காணப்பட்ட நிலையில் மாலை 4 மணிக்கு பிறகு கருமேக கூட்டங்களுடன் கூடிய வானிலை காணப்பட்டது.
அதன் பின்னர் பலத்த காற்றுடன் கூடிய கனமழை இடைவிடாமல் பெய்து வருகிறது சாலையில் தண்ணீர் ஆறுகளைப் போல பெருக்கெடுத்து ஓடுகிறது.
திருவாரூர், விளமல், வண்டாம்பாளை, மாங்குடி, மாவூர், கோமல்,புலிவலம், கேக்கரை, கண்கொடுத்தவணிதம், கமலாபுரம்,கூத்தாநல்லூர்,மேலவாசல், மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி,
உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இடைவிடாமல் பலத்த காற்று மற்றும் இடியுடன் கூடிய கனமழை இடைவிடாமல் பெய்து வருகிறது இதனால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவி வருவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி.













