மயிலாடுதுறை மாவட்டத்தில் தொடர்ந்து மூன்றாவது நாளாக பரவலாக மழை பெய்து வருகிறது :-
வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள காற்று தாழ்வு பகுதி காரணமாக மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த மூன்று தினங்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. மயிலாடுதுறை செம்பனார்கோயில் குத்தாலம் சீர்காழி கொள்ளிடம் மணல்மேடு ஆகிய மயிலாடுதுறை மாவட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் பரவலாக மழை பெய்துள்ளது. விடிய விடிய மழை பெய்த நிலையில் தற்போது மழையின் தாக்கம் சற்றே குறைந்துள்ளது. தற்பொழுது தூறல் சாரல் மழையாக பெய்து வருகிறது, கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக சீர்காழியில் 49 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது, செம்பனார்கோயிலில் 31 மில்லிமீட்டர் மழையும், இதுபோல் மாவட்டத்தின் பிற பகுதிகளிலும் சராசரியாக 28 மில்லி மீட்டர் அளவிற்கு மழை பதிவாகியுள்ளது. தற்போது சாகுபடி செய்யப்பட்டுள்ள சம்பா பயிருக்கு இந்த மழை ஏற்றது என்பதால் விவசாய பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.













