திருவள்ளூர் அருகே ஏழை, எளிய பள்ளி மாணவ, மாணவியர்களுக்கும், தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
திருவள்ளூர் அடுத்த திருப்பாச்சூர் பகுதியை சேர்ந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பூண்டி மேற்கு ஒன்றிய துணை செயலாளர் விக்னேஷ் என்பவரின் பிறந்த நாளை யொட்டி ஏழை – எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் 100-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ-மாணவிகளுக்கு நோட்டுப் புத்தகங்களும், 30-க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்களுக்கு தலா 5 கிலோ அரிசி மற்றும் மளிகை பொருட்கள் வழங்கப்பட்டது, இதனை தொடர்ந்து ஏழை, எளிய பொதுமக்களுக்கு சேவைகள் மற்றும் அன்னதானமாக பிரியாணி வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பூண்டி ஒன்றிய செயலாளர் ராபின் உட்பட
ஜி.பி.சார்லஸ், தனுஷ், உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்







