கோயில் பூசாரிகளின் ஊதியத்தை பத்தாயிரம் ரூபாயாக உயர்த்த வேண்டும்: கிராம கோயில்களுக்கு நெய்வேத்திய பொருட்கள் வழங்க கோரி நாகையில் மாவட்ட ஆட்சியரிடம் மனு
பேட்டி: மகாலிங்கம் மாவட்ட தலைவர்
நாகப்பட்டினம் மாவட்ட பூஜாரிகள் பேரமைப்பு கூட்டம் இன்று பால்பண்ணைச்சேரி வால் முனீஸ்வரர் கோவிலில் நடைபெற்றது. மாவட்ட தலைவர் மகாலிங்கம் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் மாவட்ட முழுவதிலும் இருந்து கிராம கோவில் பூசாரிகள் கலந்து கொண்டனர். கோவில் பூசாரிகளுக்கு மாத ஊதியம் 1500 லிருந்து 10,000 ஆக உயர்த்த வேண்டும், நலிவுற்ற கோயில்களுக்கு தீபம் ஏற்றும் எண்ணெய் மற்றும் நெய்வேத்திய பொருட்கள் வழங்க வேண்டும், ஓய்வூதியத்தை 5 ஆயிரம் ரூபாயாக உயர்த்த வேண்டும், 12 ஆண்டுகளுக்கு மேலாக கும்பாபிஷேகம் நடைபெறாமல் உள்ள கோவில்களை புனரமைத்து கும்பாபிஷேகம் செய்ய வேண்டும், கோயில் பூசாரிகளின் குழந்தைகளுக்கு அடிப்படை கல்வி முதல் உயர் கல்வி வரை இலவசமாக வழங்க வேண்டும் உள்ளிட்ட 12 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதனைத் தொடர்ந்து நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியரிடம் தங்கள் கோரிக்கை மனுக்களை பூசாரிகள் பேரவை சார்பில் வழங்கினர்.







