திருவள்ளூர் மாவட்டத்தில் முதல் முறையாக ஏகலைவா விருதுகள் 2026 என்ற விழாவில் சிறந்த 100 விளையாட்டு வீரர்களுக்கு மற்றும் அவர்களின் பயிற்சியாளர்கள் 30 பேருக்கு மொத்தம் 130 பேருக்கு பொற்கொடி ஆம்ஸ்டிராங்விருது வழங்கி பாராட்டினார்
திருவள்ளூர் மாவட்டத்தில் முதல் முறையாக விளையாட்டு வீரர்களையும், பயிற்சியாளர்களையும் ஊக்கப்படுத்தும் வகையில் ஏகலைவா விருதுகள் 2026 என்ற விழா லாமியா ஹோட்டலில் நடைபெற்றது.
திருவள்ளூர் மேற்கு மாவட்ட பகுஜன் சமாஜ் கட்சி பொறுப்பாளர் வழக்கறிஞர் ர.கவி மற்றும் விளையாட்டு மேம்பாட்டு அணி மாநில செயலாளர் டாக்டர் ராஜ்குமார் ஆனந்தன் ஆகியோரின் ஏற்பாட்டில் நடைபெற்றது.
இந்த விழாவில் திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த சிறந்த 100 விளையாட்டு வீரர்கள் மற்றும் அவர்களின் பயிற்சியாளர்கள் 30 பேருக்கு என மொத்தம் 130 பேருக்கு விருது வழங்கப்பட்டது. இந்த விழாவிற்கு சிறப்பு விருந்தினராக தமிழ் மாநில பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் பொற்கொடி ஆம்ஸ்ட்ராங் . மற்றும் அர்ஜுனா விருது பெற்ற பாஸ்கரன், தொழிலதிபர் பிரேம்குமார் என்கின்ற அப்பு மற்றும் டாக்டர் புனிதா சண்முகம் ஆகியோர் இந்த விழாவில் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு விருதுகளை வழங்கி கௌரவித்தனர். திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் மாநில அளவிலும் தேசிய அளவிலும் உலக அளவிலும் வெற்றி பெற்று சாதனை படைக்க வேண்டும் என பொற்கொடி ஆம்ஸ்ட்ராங் பேசும்போது தெரிவித்தார்.







