தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கண்டன போராட்டம் நடைபெற்றது :-
மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கம் சார்பில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தர்ணா போராட்டம் நடைபெற்றது. ஓய்வூதியர்களை பாதிக்கும் நிதி மசோதாவை ரத்து செய்ய வேண்டும் புதிய ஓய்வூதிய திட்டம் ரத்து செய்யப்பட்டு அனைத்து ஊழியர்களுக்கும் பழைய ஓய்வு ஊதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும், கொரோனா காலத்தில் கொடுக்கப்படாத 18 மாத கால அகவிலைக் படியை வட்டியுடன் வழங்க வேண்டும், மருத்துவ காப்பீடு திட்ட குளறுபடிகளை நீக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான ஓய்வூதியர்கள் பங்கேற்று தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினர். மாவட்ட தலைவர் நாகராஜன் தலைமையில் ஏராளமான நிர்வாகிகள் பங்கேற்றனர்.














