விழுப்புரம் மாவட்டம் அரசூரில் மழை வேண்டி வருண ஹோமம்! 66-க்கும் மேற்பட்ட கிராமங்கள் பயன்பெற சிறப்பு வழிபாடு
ஜீவநதி மலட்டாறு எழுச்சிக்கூடல் சார்பில், ஆண்டுதோறும் விஜயதசமி நாளில் மழை வேண்டி மலட்டாற்றில் வருண பகவானுக்கு வருண ஹோமம் நடத்தப்பட்டு வருகிறது. இதன்படி, இந்த ஆண்டு நடைபெற்ற வழிபாட்டில் அரசூர் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள், விவசாயிகள், பெண்கள், குழந்தைகள் கலந்து கொண்டு, மழை பெய்து விவசாயம் செழிக்க வேண்டினர்.
விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி ஆகிய மூன்று மாவட்டங்களில் 66-க்கும் மேற்பட்ட கிராமங்கள் பயன்பெறும் வகையில் இந்த வழிபாடு நடத்தப்படுகிறது.
இதற்கிடையே, ஏரி, குளங்கள் மற்றும் வரத்து வாய்க்கால்களைத் தூர்வாரி, மழைநீரை முழுமையாகச் சேமிக்க தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். பேட்டி= தர்ஷணாமூர்த்தி ஒருங்கிணைப்பாளர்

















