May 4, 2026, Monday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home Cinema

உதயநிதி மகன் இன்பநிதி சினிமாவில் அறிமுகம் ? ரசிகர்களுக்கு புதிய சர்ப்ரைஸ் !

by Priscilla
October 9, 2025
in Cinema
A A
0
உதயநிதி மகன் இன்பநிதி சினிமாவில் அறிமுகம் ? ரசிகர்களுக்கு புதிய சர்ப்ரைஸ் !
0
SHARES
5
VIEWS
Share on FacebookTwitter

தமிழ் திரைத்துறையில் ஸ்டாலின் குடும்பத்தின் பங்களிப்பு எப்போதும் சிறப்பாக பேசப்படும் ஒன்றாகும். அந்த மரபைத் தொடர்ந்து, தற்போது உதயநிதி ஸ்டாலின் மகன் இன்பநிதி திரைப்பட உலகில் நடிகராக அறிமுகமாக உள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

‘பராசக்தி’ உள்ளிட்ட பல சிறந்த படங்களுக்கு வசனம் எழுதி தமிழ் சினிமாவுக்கு வழிகாட்டியவர் திமுக நிறுவனர் மு.கருணாநிதி. அவரின் மகனும் தற்போதைய தமிழக முதல்வருமான மு.க. ஸ்டாலின், 1987 ஆம் ஆண்டு வெளிவந்த ஒரே ரத்தம் திரைப்படத்தில் நடித்து திரைத்துறையில் காலடி வைத்தார். பின்னர் மக்கள் ஆணையிட்டால் திரைப்படத்திலும் அவர் நடித்திருந்தார்.

அவரைத் தொடர்ந்து 2012 ஆம் ஆண்டு உதயநிதி ஸ்டாலின், ஒரு கல் ஒரு கண்ணாடி திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். அந்தப் படம் அவருக்கு பெரும் வரவேற்பைப் பெற்றுத் தந்தது. பின்னர் இது கதிர்வேலனின் காதல், நண்பேன்டா, கெத்து, மனிதன், நெஞ்சுக்கு நீதி, மாமன்னன் உள்ளிட்ட பல படங்களில் நடித்தார்.

கடைசியாக மாரி செல்வராஜ் இயக்கிய மாமன்னன் திரைப்படத்தில் நடித்த பிறகு, உதயநிதி அரசியலில் முழுமையாக ஈடுபட்டு வருகிறார். இதேசமயம், அவரது மகன் இன்பநிதி ரெட் ஜெயண்ட் மூவிஸ் தயாரிப்பு நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பை ஏற்றுள்ளார்.

சமீபத்தில் இன்பநிதி சினிமாவில் ஹீரோவாக அறிமுகமாகும் முயற்சியில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அவருக்கென சிறப்பாக நடிப்புப் பயிற்சி மேற்கொண்டு வரும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகிக் கொண்டிருக்கின்றன.

திரையுலக வட்டாரங்களில் இருந்து வரும் தகவலின்படி, இன்பநிதியின் முதல் படத்தை இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கவுள்ளார் என்று கூறப்படுகிறது. உதயநிதியின் கடைசிப் படம் மாமன்னன்யை இயக்கியவர் மாரி செல்வராஜ் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இன்பநிதி நடிக்கும் திரைப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ரசிகர்கள் இதற்காக ஏற்கனவே பெரும் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

Tags: director maari selvarajdmkinbanithitamil cinemasudhayanithi stalin
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

கன்னட நடிகர் சிவராஜ் குமார் சாமி தரிசனம்

Next Post

விஜய் வீட்டுக்கு 2வது முறையாக வெடிகுண்டு மிரட்டல் !

Related Posts

பீமா ஜுவல்லரி தேனி மதுரை சாலையில் பிரம்மாண்ட ஷோரூம் திறப்பு விழா நடந்தது இந்த நிகழ்ச்சி
Cinema

March 30, 2026
சினிமா வெறும் பொழுதுபோக்கு அல்ல;சமூகத்திற்கு கருத்து சொல்லவே உழைக்கிறோம் என இயக்குனர் சமுத்திரக்கனி உரை

February 3, 2026
‘ஜனநாயகன்’ திரைப்படத்திற்கு தணிக்கைச் சான்றிதழ் வழங்க உத்தரவு – சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு

January 9, 2026
ஜனநாயகன் | “Delayed but not Defeated” – விஜய்க்காக குரல்கொடுத்த நடிகர் ஜீவா
Cinema

ஜனநாயகன் | “Delayed but not Defeated” – விஜய்க்காக குரல்கொடுத்த நடிகர் ஜீவா

January 9, 2026
Next Post
விஜய் வீட்டுக்கு 2வது முறையாக வெடிகுண்டு மிரட்டல் !

விஜய் வீட்டுக்கு 2வது முறையாக வெடிகுண்டு மிரட்டல் !

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
திருவாரூரில் நான்கு வழி சாலை அமைக்கும் பணியை நிறுத்தி, நீர்நிலைகளை பாதுகாக்க கோரிக்கை

May 3, 2026
வழுவூர் வளையாம்பட்டினம் பாலமுருகன் ஆலயத்தில் 42-ம் ஆண்டு சித்ரா பௌர்ணமி மகோத்ஸவ உற்சவ திருக்கல்யாண வைபவம்

சீர்காழி சட்டை நாதர் சுவாமி கோயிலில் சித்திரை மாத பௌர்ணமி கிரிவலம்

May 3, 2026
வழுவூர் வளையாம்பட்டினம் பாலமுருகன் ஆலயத்தில் 42-ம் ஆண்டு சித்ரா பௌர்ணமி மகோத்ஸவ உற்சவ திருக்கல்யாண வைபவம்

செம்பனார்கோவில் உள்ள பிரசித்தி பெற்ற கண்டியன்குளம் ஸ்ரீ மாரியம்மன் கோவில் தீமிதி திருவிழா

May 3, 2026
பல நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த கிராம தேவதை தேரோட்டம்

பல நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த கிராம தேவதை தேரோட்டம்

May 3, 2026
பல நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த கிராம தேவதை தேரோட்டம்

பல நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த கிராம தேவதை தேரோட்டம்

0
திருவாரூரில் நான்கு வழி சாலை அமைக்கும் பணியை நிறுத்தி, நீர்நிலைகளை பாதுகாக்க கோரிக்கை

திருவாரூரில் நான்கு வழி சாலை அமைக்கும் பணியை நிறுத்தி, நீர்நிலைகளை பாதுகாக்க கோரிக்கை

0
செங்கல்பட்டு திருக்கழுக்குன்றம் வேதகிரிஸ்வரர் சித்திரை திருவிழா

திருக்கடையூர் கோவிலில் TVK-தின் பொதுச்செயலாளர் புஸிஆனந்த் குடும்பத்துடன் சாமிதரிசனம்

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.