திருவாரூரில் மெடிக்கலில் குட்கா விற்ற இருவர் கைது 37 கிலோ குட்கா பறிமுதல்.
திருவாரூர் நகர காவல் துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின்படி திருவாரூர் புதிய பேருந்து நிலையம் பகுதியில் செயல்பட்டு வரும் கமலா மருந்தகத்தில் குட்கா உள்ளிட்ட தடை செய்யப்பட்ட போதைப் பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக தகவல் கிடைத்தது அதனையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற நகர காவல்துறையினர் மருந்தகத்தை சோதனை செய்த போது 36.5 கிலோ குட்கா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
அதனையடுத்து கடையின் உரிமையாளர் கார்த்திகேயனை காவல்துறையினர் கைது செய்து அவரது செல்போனை ஆய்வுக்கு உட்படுத்தினர்.
இதில் சேலத்தைச் சேர்ந்த ஆறுமுகம் என்பவரிடமிருந்து குட்கா உள்ளிட்ட தடை செய்யப்பட்ட போதை பொருட்களை வாங்கி வந்து மெடிக்கலில் வைத்து விற்பனை செய்தது விசாரணையில் தெரியவந்தது .
இதனை தொடர்ந்து கார்த்திகேயன் மற்றும் ஆறுமுகம் ஆகிய இருவரையும் காவல்துறையினர் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டினம் தொடர்ந்து நாகப்பட்டினம் சிறையில் அடைத்தனர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.















