இது டிவிகே அலுவலகம் இல்லை மக்கள் குறை தீர்வு முகாம் அலுவலகம் என விழா மேடையில் திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் பெருமிதம். தொடர்ந்து காமராஜரின் 124 வது பிறந்த நாளை முன்னிட்டு 200க்கும் மேற்பட்ட நடுநிலை பள்ளி குழந்தைகளுக்கு நோட்டு புத்தகம் வழங்கி பாராட்டு
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் நகராட்சிக்கு உட்பட்ட 30 மற்றும் 31 வது வார்டு தமிழக வெற்றிக் கழக வார்டு பொறுப்பாளர்கள் லோகேஷ் மற்றும் மணிகண்டன் ஒன்றிணைந்து அந்தப் பகுதி மக்களின் குறைகளை கேட்டு அறிந்து உடனடி தீர்வு அளிக்கும் வகையில் அவர்களுடைய சொந்த வார்டு பகுதியில் மக்கள் குறை தீர்வு முகாம் அலுவலகம் அமைத்து அதனுடைய திறப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த திறப்பு விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்ட திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் திருப்பதி அனைவரும் அவரவர் கட்சிக்கு உரிய அலுவலகத்தை அமைப்பார்கள் ஆனால் தமிழக வெற்றி கழகத்தைச் சேர்ந்த நமது வார்டு பொறுப்பாளர்கள் மக்கள் குறை தீர்வு முகாம் அலுவலகம் என அமைத்து உயர் அதிகாரிகளை சந்திப்பதற்கு முன்பாகவே சிறிய சிறிய பிரச்சனைகளை மக்களிடம் கேட்டறிந்து தீர்க்கும் வகையில் மக்கள் குறை தீர்வு முகாம் அலுவலகம் அமைத்திருப்பது பெருமையாக இருக்கிறது என்று பேசினார்.
இதனைத் தொடர்ந்து தமிழக வெற்றி கழக நகர பொறுப்பாளர்கள் மற்றும் வர்த்தக அணி இணைந்து காமராஜரின் 124 வது பிறந்த நாளை முன்னிட்டு துவக்கப்பள்ளி மாணவ மாணவிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கலந்து கொண்டு சுமார் 200க்கும் மேற்பட்ட துவக்கப்பள்ளி மாணவ மாணவிகளுக்கு நோட்டு புத்தகம் பேனா பென்சில் தண்ணீர் பாட்டில் ஆகியவற்றை வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் வார்டு பொறுப்பாளர்கள் லோகேஷ், மணிகண்டன் வர்த்தக அணி துணை அமைப்பாளர் பிரவீன் குமார் உள்ளிட்ட பல்வேறு பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.















