தோட்டக்கலை துறையில் உழவர் அலுவலர் தொடர்பு திட்டம் 2.0 (UATT 2.0) திட்டத்தை ரத்து செய்யக்கோரி தோட்டக்கலை துறை அலுவலர்கள் திருவள்ளூரில் கோஷங்கள் எழுப்பி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவ கல்லூரி சாலையில் தமிழ்நாடு தோட்டக்கலை துறை அலுவலர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் (UATT 2.0) அதாவது உழவர் அலுவலர் தொடர்பு திட்டம்-2.0 மூலமாக 4,311 விரிவாக்க அலுவலர்களை ஒன்றிணைத்து ஒவ்வெறு கள அலுவலருக்கும் 3 முதல் 4 கிராமங்களை ஒதுக்கப்பட வேண்டும் என அரசாணையில் கூறப்பட்டுள்ளது. ஆனால் நடைமுறையில் 20 சதவீதம் களப்பணியாளர்களுக்கு மட்டுமே 3 முதல் 4 கிராமங்களும், 80 சதவீதம் களப்பணியாளர்களுக்கு 8 முதல் 22 கிராமங்கள் வரை ஒதுக்கீடு செய்து அதிக பணிச்சுமையை வழங்கி உள்ளதாகவும், மேலும் ஒரே கள அலுவலரிடம் பல்வேறு துறைகளின் பொறுப்புகளை ஒப்படைப்பதால் ஒவ்வொரு பயிருக்கும் தேவையான தொழில்நுட்ப ஆலோசனைகள் உரிய நேரத்தில் வழங்க இயலாத நிலை உருவாகும். இதனால் விவசாயிகளின் உற்பத்தி, வருமானம் மற்றும் அரசுத் திட்டப் பயன்கள் பாதிக்கப்படுவதுடன், இலட்சக்கணக்கான தோட்டக்கலை விவசாயிகளின் வாழ்வாதாரமும் கேள்விக்குறியாகும் என்பதால்தான் கடந்த 2023- ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட (UATT 2.0) உழவர் அலுவலர் தொடர்பு திட்டம்- 2.0 திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்ததால் இந்த திட்டம் செயல் படுத்தப்படாமல் இருந்த நிலையில் தற்போது இந்த திட்டம் நடைமுறை படுத்தப்பட்டுள்ளது. எனவே தமிழ்நாட்டின் உணவு பாதுகாப்பு, ஊட்டச்சத்து பாதுகாப்பு, விவசாயிகளின் வருமான உயர்வு உள்ளிட்டவைகளை கருத்தில் கொண்டு உழவர் அலுவலர் தொடர்பு திட்டம் -2.0 (UATT) திட்டத்தை ரத்து செய்து பழைய திட்டத்தையே நடைமுறை படுத்த வலியுறுத்தி 200-க்கும் மேற்பட்ட தமிழ்நாடு தோட்டக்கலை துறை அலுவலர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் கோஷங்கள் எழுப்பியும், பதாகைகளை எழுந்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பேட்டி : சவுந்தர்யா – உதவி தோட்டக்கலை அலுவலர் – திருவள்ளூர் மாவட்டம்.















