தமிழ்நாட்டில் மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் சுய கணக்கெடுப்பு பணிகள் இன்று சீர்காழி அருகே தொடங்கியுள்ளன.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே அகரபெருந்தோட்டம் கிராமத்தில், சட்டமன்ற உறுப்பினர் செந்தில் செல்வன் இந்த மக்கள் நலத் திட்டத்தைத் தொடங்கி வைத்தார்.”இந்நிகழ்வில் சீர்காழி வட்டாட்சியர் ராஜரத்தினம், துணை வட்டாட்சியர் பாபு, மக்கள் தொகை கணக்கெடுப்பு பயிற்சியாளர் சபரிவாசன் மற்றும் வருவாய் ஆய்வாளர் அருளாம்பிகா ஆகியோர் உடனிருந்தனர்.”இந்தக் கணக்கெடுப்பின் சிறப்பம்சமே, பொதுமக்கள் தாங்களாகவே இணையதளம் வாயிலாகத் தங்களைப் பற்றிய தகவல்களைப் பதிவு செய்யும் ‘சுய கணக்கெடுப்பு’ (Self-Enumeration) முறைதான். இதற்காக அரசு se.census.gov.in என்ற இணையதளத்தை உருவாக்கியுள்ளது. இதில் கேட்கப்பட்டுள்ள 33 கேள்விகளுக்கு, பொதுமக்கள் தங்கள் கைப்பேசி மூலமாகவே மிக எளிமையாகப் பதிலளிக்கலாம், என வட்டாட்சியர் ராஜரத்தினம், ‘பொதுமக்கள் அனைவரும் இந்தச் சுய கணக்கெடுப்பு வசதியைப் பயன்படுத்தி, தங்கள் குடும்ப விவரங்களைப் பதிவேற்றம் செய்ய வேண்டும். மக்கள் தொகை கணக்கெடுப்பு என்பது நாட்டின் வளர்ச்சிக்கு அடிப்படை என்பதால், பொதுமக்கள் அனைவரும் அரசுக்கு முழு ஒத்துழைப்பு நல்க வேண்டும்’ என்று கேட்டுக்கொண்டனர்.”குறிப்பாக, மயிலாடுதுறை மாவட்டத்தில் கிராமப்புறங்களுக்கான மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள் ஆகஸ்ட் 1-ம் தேதி தொடங்கி, 30-ம் தேதி வரை நடைபெற உள்ளது. அதேபோல், தற்போதைய இந்தச் சுய கணக்கெடுப்புப் பணிகள் ஜூலை 31-ம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, சீர்காழி பகுதி பொதுமக்கள் காலதாமதமின்றி தங்களைப் பதிவு செய்துகொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்.”















