தமிழக வெற்றி கழகம் ஆட்சி அமைத்து முதல் முறையாக திருவாரூரில் விவசாய கண்காட்சி மற்றும் மண் பரிசோதனை பயிற்சிகள் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது.
தமிழகத்தில் நடைபெற்ற முடித்த சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றி கழகம் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தபின் தமிழ்நாட்டில் முதல்முறையாக திருவாரூரில் விவசாயிகளுக்கான கண்காட்சி மற்றும் மண் பரிசோதனை முகாம் நடைபெற்றது. திருவாரூர் அருகே அலிவலம் பகுதியில் உள்ள தனியார் அரங்கில் விவசாயிகளுக்கு இயற்கை விவசாயத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக விவசாய கண்காட்சி மற்றும் பயிற்சிகள் வழங்கப்பட்டது.
இந்த கருத்தரங்கில் விவசாயிகளுக்கு பல்துறை அரசு வல்லுனர்கள் மூலம் ஆலோசனை வழங்கப்பட்டது. இயற்கை விவசாயத்திற்கு விவசாயிகள் என்ன செய்ய வேண்டும் விவசாயத்திற்கு உரங்களை எப்படி இடவேண்டும்.விவசாய நிலங்களுக்கு மண்பரிசோதனை செய்வது குறித்தும் தெளிவாக ஆலோசனை வழங்கப்பட்டது. இதில் திருவாரூர் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் கலந்து கொண்டு பயன்பட்டனர்
மேலும் விவசாயிகள் இந்த கண்காட்சியில் பங்கேற்றுவதன் மூலம் விவசாயிகள் பயன் பெற்றதாகவும் தெரிவித்தனர். மேலும் விவசாயிகள் தங்களது நிலத்தில் உள்ள மண்ணை பரிசோதிக்க அரசு அதிகாரிகளிடம் மண்ணை கொடுத்தனர் மேலும் இந்த கண்காட்சியில் 200க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்று பயனடைந்தனர்.















