நாகப்பட்டினத்தில் உதயநிதி ஸ்டாலின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து தவெக கண்டன ஆர்ப்பாட்டம்:
நாகப்பட்டினம் மாவட்டம் அவுரி திடலில், உதயநிதி ஸ்டாலினின் பேச்சைக் கண்டித்து தமிழக வெற்றி கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தமிழக வெற்றி கழகத்தின் நாகப்பட்டினம் மாவட்ட செயலாளர் சுகுமார் தலைமையில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் பெண் நிர்வாகிகள், மாவட்ட மற்றும் பகுதி நிர்வாகிகள், கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் என ஏராளமானோர் திரளாகக் கலந்து கொண்டனர்.
அப்போது, உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராகவும், திமுக அரசுக்கு எதிராகவும் கண்டன முழக்கங்களை எழுப்பிய அவர்கள், அவரது பேச்சுக்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்து கோஷங்களை எழுப்பினர். மேலும், உதயநிதி ஸ்டாலினின் பேச்சு குறித்து தமிழக வெற்றி கழக நிர்வாகிகள் தங்கள் கடும் கண்டனத்தைப் பதிவு செய்தனர்.
இதனால் அவுரி திடல் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ஆர்ப்பாட்டத்தைத் தொடர்ந்து, தமிழக வெற்றி கழக மாவட்ட செயலாளர் சுகுமார் தலைமையில் நிர்வாகிகள் நாகப்பட்டினம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களை நேரில் சந்தித்து, இச்சம்பவம் தொடர்பாகக் கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர்.

















