- மே 5 வணிகர்களுக்கான தினத்தை அரசு தினமாக அறிவித்து பொது விடுமுறை அளிக்க வேண்டும்- வணிக உரிமம் பெற்ற வணிகர்களை அரசே முன்வந்து வணிகர் நல வாரியத்தில் இணைக்க வேண்டும் தமிழக அரசுக்கு தமிழ்நாடு அனைத்து வணிகர் சங்கங்களின் பேரமைப்பு கோரிக்கை
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் தமிழ்நாடு அனைத்து வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பாக நிர்வாகிகள் பதவியேற்பு மற்றும் நிர்வாகிகள் அறிமுக விழா நடைபெற்றது நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு அனைத்து வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில தலைவர் கொளத்தூர் ரவி வருகை தந்த அவர் நிகழ்ச்சிக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறுகையில் புதிய தமிழக அரசுக்கு பத்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி உள்ளதாகவும், அதில் குறிப்பாக வணிகர்கள் வணிக உரிமம் பெற்று செயல்பட்டு வரும் வணிகர்களுக்கு அரசு முன்வந்து வணிகர்களுக்கான நல நல வாரியத்தில் அரசு நினைக்க வேண்டும், 75% வரி ஈட்டி அரசு நடத்துவதற்கு துணையாக முக்கிய பங்கு வைப்பது வணிகர்கள் தான் எனவே வணிகர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்பட வேண்டும். அதுமட்டுமின்றி வணிகர்களில் முக்கிய கோரிக்கையான ஆண்டுதோறும் அனுசரிக்கப்படும் மே 5 வணிகர்கள் தினத்தை அரசு தினமாக அறிவித்து பொது விடுமுறை வழங்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை தமிழக அரசுக்கு முன் வைத்தார்.
இந்தக் கூட்டத்தில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிளுக்கு அறிமுக விழா மற்றும் சால்வை அணித்து வாழ்த்து தெரிவிக்கப்பட்டது
இந்த கூட்டத்தில் நெல்லை தூத்துக்குடி குமரி ஆகிய மாவட்டங்களை சேர்ந்த புதிய நிர்வாகிகள் அறிமுக விழா கலந்து கொண்டனர் நிகழ்ச்சிக்கு மாநிலத் தலைவர் கொளத்தூர் ரவி தலைமை தாங்கி புதிய நிர்வாகிகளை அறிமுகம் செய்து வைத்தார் இதில் குமரன் நாகேந்திரன் மற்றும் மாவட்டச் செயலாளர் கோபுராஜ் ஆகியோர் தலைமை வகித்தனர். பின்னர் புதிய நிர்வாகிகளை நாகர்கோவில் மாநகராட்சி பொறுப்பு மேயர் மேரி பிரின்சி லதா மற்றும் கன்னியாகுமரி டிஸ்ட்ரிக்ட் சிவில் இன்ஜினியர் அசோசியேசன் தலைவர் சரவண சுப்பையா ஆகியோர் பொன்னாடை போர்த்தி வாழ்த்து தெரிவித்தனர் இந்நிகழ்ச்சியில் நாகர்கோவில் கிழக்கு மாவட்ட தலைவர் கண்ணன்
மத்திய மாவட்ட பொருளாளர் திலீப் குமார்
தூத்துக்குடி புறநகர் தலைவர்
ஜான் ராஜா
நெல்லை தெற்கு மாவட்ட தலைவர் லிங்க சித்திரை
மற்றும் நிர்வாகிகள் மகளிர் அணி தலைவி பத்மாவதி
உட்பட பலர் கலந்து கொண்டனர்.

















